என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி (73) பதவியேற்றார்.
- அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு பாரளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மேலும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச் செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.
ரிஷபம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
கடகம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
சிம்மம்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
கன்னி
தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
செல்வ நிலை உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
தனுசு
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர்.
கும்பம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை தருவர்.
மீனம்
யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 304 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் பிலிப் சால்ட் 39 பந்தில் சதமடித்து அசத்தினார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.
ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கேமரா செல்பி ஸ்டிக் போன்ற உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.
- இந்த கோர விபத்தில் 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.
ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் பாய்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இது அரிதான நிகழ்வு. விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் கொண்டது என்கிறது நாசா.
- சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை எனப்படுகிறது.
வாஷிங்டன்:
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது.
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளை தோன்றியுள்ளது. இந்த உருவாக்கம் செப்டம்பர் 11 அன்று புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு அதன் அசாதாரண வடிவம் மற்றும் விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் ஆகியவற்றால் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை என அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில், சூரியனின் காந்தப்புலங்கள் திறந்து, சூரியக் காற்று விண்வெளியில் தப்பிச்செல்ல அனுமதிக்கிறது. அந்தத் துளையிலிருந்து வரும் சூரியக் காற்று செப்டம்பர் 14-ம் தேதிக்குள் பூமியை அடையும், இது புவி காந்த புயல்களை ஏற்படுத்தக் கூடும் என நாசா தெரிவித்துள்ளது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும்.
- தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என்றார் அகிலேஷ்.
லக்னோ:
பாராளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டே தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றது என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர்.
இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
வாக்குத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை.
வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது.
அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
மான்செஸ்டர்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 100 ரன்களைத் தொட்டது.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 160 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஓமன் 67 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 66 ரன்னில் வெளியேறினார்.
ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஓமன் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் சயீம் அயூப், சுபியான் முகீம், பாஹிம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- ஜனாதிபதி, ராணுவ தளபதி, போராட்டக்குழு பிரதிநிதிகள் இடையே ஒருமித்த கருத்து.
- அதிபர் மாளிகை முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.
அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது. சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.






