என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு: சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றால் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டல்
    X

    நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு: சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றால் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டல்

    • இந்து துறவிகள் இருவரை அவமதித்ததாக கூறி துப்பாக்கிச்சூடு.
    • எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனக் குற்றச்சாட்டு.

    பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் இன்று அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர்.

    துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×