என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.

     

    படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதை சொல்லியாக அவரது குரலை கொடுத்துள்ளார். இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் இந்திய வீரர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால்இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடையே தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காம்பீர் கூறியதாக அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.

    அரசியல் வேறு விளை யாட்டு வேறு. இந்த விஷயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் பி.சி.சி.ஐ. மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். காம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இது தான். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    இவ்வாறு டென் டொஸ்சாட் கூறினார்.

    • இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
    • நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில்

    * 258 பேர் உயிரிழந்தனர்

    * 1,108 பேர் காயமடைந்தனர்

    * 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன

    * 60,000 பேர் இடம் பெயர்ந்தனர்

    * பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்

    இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

    நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை.

    ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா? என்று வினவியுள்ளார்.

    • மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
    • நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி மேலாளர் கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் சென்றார்.

    பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் நேற்று இரவு 3 ஊழியர்களுடன் சென்னை திரும்பினர்.

    திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

    'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும், நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இட்லி கடையில் நடிக்கும் தனுஷின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனுஷ், முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    மேலும், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
    • மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.
    • தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

    மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ந் தேதி) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.

    மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.

    • பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!

    சென்னை :

    சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இளையராஜாவின் பாராட்டு விழா நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!

    இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை! என கூறியுள்ளார். 

    • இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

    • திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    • பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர்.

    திருப்பதி மலைகள் மற்றும் பீமிலி சிவப்பு மணல் திட்டுகளின் இயற்கை பாரம்பரியம் உட்பட நாட்டில் உள்ள 7 இடங்கள் உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவால் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    திருப்பதியில் ஏழுமலையான் வசித்த 7 மலைகளான சப்தகிரிகள் விஷ்ணு பகவான் ஓய்வெடுத்த ஆதிசேஷனின் 7 பாதங்கள், அந்த 7 மலைகள், சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி ஆகியவை புனிதமாக கருதப்படுகிறது.

    ஒவ்வொரு அடியிலும் புனிதம் தெளிவாகத் தெரியும். திருப்பதி மலைகளில் உள்ள ஒவ்வொரு மலைக்கும் சொந்த வரலாறு உள்ளது.

    ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் இணைக்கும் திருப்பதி மலைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு புகலிடமாகும். அவை அரிய தாவர மற்றும் விலங்கு இனங்களின் தாயகமாகும். இங்குள்ள காலநிலை பன்முகத்தன்மை கொண்டது.

    திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன.

    திருப்பதி கோவிலில் இருந்து கிருஷ்ணதேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசுகிறது. வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 82, 149 பேர் தரிசனம் செய்தனர். 36,578 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது.
    • ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×