என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
- மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக உள்ளனர்.
கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க.வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில், "கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ்தான் உள்ளார். அவர் அனுமதியின்றி கட்சியின் பெயர் உள்ளிட்டவைகளை பிறர் பயன்படுத்த முடியாது. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி இதை பயன்படுத்த முடியாது. " என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.தர்மபிரபு, டாக்டர் ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம்
- நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "உங்கள் மீது யாராவது கை வைத்தால், ஆயிரம் இல்லை ரெண்டாயிரம் தவெக தொண்டர்கள் அடுத்த 15 நிமிடங்களில் உங்களுடன் வந்து நிற்பார்கள். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம், மந்திரியா இருக்கலாம்... ஆனா நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
- அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?
- வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.
நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்திருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக CBI-ஐ நாட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி. இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
* ஐகோர்ட் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக வழக்குப்பதியாதது ஏன்?
* அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?
* வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.
* ஐகோர்ட் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அ.தி.மு.க. CBI-ஐ நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
- தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சசிகலா பேசியதாவது:-
என் மீதான வழக்கில் தீர்ப்பு வந்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை. அப்போது என் கவனம் எல்லாம் அரசை கலைக்க விட்டு விடக்கூடாது என்ற பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஒரு வாரம் அவகாசம் கேட்டும் கிடைக்கவில்லை. நாளைக்கு மாலை 6 மணிக்கு பெங்களூரு சிறைக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே எம்.எல்.ஏ.க்களை கூட்டி ஒருவரை முதலமைச்சராக (எடப்பாடி பழனிசாமி) தேர்ந்தெடுத்தோம். நான் அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை. அவர் உடனே என்ன சொன்னார்? நீங்களே எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கி கொடுங்க என்றார். அதையும் செய்தேன். பிறகு பெங்களூரு சென்றேன்.
சில மாதங்கள் சென்றது. நீங்கள் ஏன் பெங்களூருவில் இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் கேட்டனர். தமிழகத்துக்கு மாற்றிடலாம் என்றனர். அதை மறுத்து நான் பேசியது ஏதோ தெய்வாதீனமாக எனக்கு தோன்றியது போல இருக்கிறது. இல்லை என்றால் நான் இன்றைக்கு பேசிக்கொண்டு இருப்பேனா என்பதே கஷ்டம். அதுக்கு அப்புறம் திடீர்னு ஒரு பொதுக்குழு, என்னை நீக்கினார்கள்.
நான் ஒருவரை முதலமைச்சராக உட்கார வைத்து விட்டு சென்றேன். ஆனால் என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
தினமும் எனக்கு பிரச்சனை. இதற்கிடையே எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது பரோலில் 15 நாட்கள் விடுப்பு கேட்டேன். 5 நாட்கள் மட்டும் கொடுங்கள் என இங்கே முதலமைச்சர் கூறினார். போயஸ் கார்டன் வீட்டில் தங்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை எனக்கு விதித்தனர். எனது கணவர் மறைந்த தகவல் வந்தது. அதற்கும் கேட்ட பரோல் கிடைக்கவில்லை.
ஆட்சியில் உட்கார வைத்த என்னை, ஈட்டி வைத்து குத்தியது போல செய்தனர். இதை எல்லாம் மீறி, நான் விடுதலை ஆகி சென்னைக்கு வந்தேன். காரில் கட்சி கொடி கட்டக்கூடாது. ஜெயலலிதா சமாதிக்கு போகக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர். தமிழக எல்லைக்கு வந்தவுடன் என்னை கைது செய்ய காத்திருந்தனர்.
இன்று கட்சி சரிந்து போய்விட்டது. எப்படியாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்து இருந்தால் அப்பவே எதையும் செய்திருக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது. நம்மை கைவிடமாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் இந்த முடிவை எடுப்பதற்காக வந்தேன். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்லி விட்டேன். இனி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். புதிய களத்தை காணப்போகிறோம் என்றார்.
- ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.
சசிகலா பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.
நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
- வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது.
- நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் வயது மூப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையான செயலாகும். அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நல்ல கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
- நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வாக்குமூலமாக கூறுகையில், எனது மாமியார் வயது முதிர்வால் நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னை சம்பந்தமே இல்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார்.
வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், சந்தேகப்பட்டு பேசுவார். இதனால் எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
இந்நிலையில் நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
- தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
- பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
* பா.ஜ.க. என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க. உள்ளது.
* அ.தி.மு.க. என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. இருக்கிறது.
* பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது.
* பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
* குஜராத் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை.
* மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?
- தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* எப்போது தான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பா.ஜ.க.வினர் பேசுவார்கள்?
* நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவெடுக்க இவர்கள் யார்?
* தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?
* தமிழ்நாட்டு மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
* தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.
* வாய்க்கு வந்தபடி எல்லாம் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
* நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருவர் ரூ.15 லட்சம் தரேனு வடை சுட்டமாதிரி, இப்போ வெரைட்டி வெரைட்டியா இ.பி.எஸ். வடை சுட்டுட்டு இருக்கிறார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
- உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.
நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்.
எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன் என்று கூறியுள்ளார்.
- சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.
- பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோற்கும்.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.
* தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.
* பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோற்கும்.
* இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு vs என்டிஏ-க்கு தான்
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், "அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டினார். அதாவது, தமிழ்நாட்டுக்கும் - டெல்லிக்குமான தேர்தல் என்கிறார். டெல்லியில் எதுவும் போட்டியிடுகிறீர்களா? பிறகு எதற்கு அதைப்பற்றி பேசுகிறீர்கள்" என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.
- தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி உள்ளது திராவிட மாடல் அரசு.
* 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.
* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்.
* சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.
* தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.
* என்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
* தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபிக்கிறோம்.
* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






