என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்த தேர்தல் தமிழ்நாடு vs NDA-க்கு தான் - விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
    X

    இந்த தேர்தல் தமிழ்நாடு vs NDA-க்கு தான் - விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

    • சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.
    • பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோற்கும்.

    நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.

    * தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.

    * பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோற்கும்.

    * இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு vs என்டிஏ-க்கு தான்

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், "அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டினார். அதாவது, தமிழ்நாட்டுக்கும் - டெல்லிக்குமான தேர்தல் என்கிறார். டெல்லியில் எதுவும் போட்டியிடுகிறீர்களா? பிறகு எதற்கு அதைப்பற்றி பேசுகிறீர்கள்" என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×