என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கழகம் வளர்வதற்குத் திருச்சியில் முக்கியக் காரணமாக இருந்தவர்களில் பெரியவர் பாலகிருஷ்ணனும் ஒருவர்.
- பாலகிருஷ்ணன் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அன்பில் ஆகியோரோடு பயணித்தவர்.
திருச்சி:
திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பால கிருஷ்ணன்-மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே.மோகன்-எம். சாந்த குமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது அவர் பேசியதாவது:
இந்த பகுதியிலே திராவிட முன்னேற்ற கழகம் வளர்வதற்கு, நமது இரு வண்ண கொடி இந்த வட்டாரத்தில் பறப்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் பால கிருஷ்ணன். அவர் இன்று இல்லை என்று சொன்னாலும், அவரது மகன் பரணி குமார் இந்த இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டு தந்தை விட்டு சென்று இருக்கும் பணிகளை எல்லாம் சிறப்பாக செய்து இருக்கிறார். பாலகிருஷ்ணன் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அன்பில் ஆகியோரோடு பயணித்தவர்.
கழகம் வளர்வதற்குத் திருச்சியில் முக்கியக் காரணமாக இருந்தவர்களில் பெரியவர் பாலகிருஷ்ணனும் ஒருவர். பரணிகுமார் என்னோடு 20 ஆண்டு காலமாகச் சுற்றுப்பயணங்க ளில் நிழல் போலத் தொடர்ந்தவர். நான் இளைஞரணி தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது, எனது காரை ஓட்டியவர் பரணிகுமார் தான்.
அவர் கார் ஓட்டும்போது எனக்கு எந்த அச்சமும் இருக்காது. பல நேரங்களில் இரவு 2 அல்லது 3 மணி வரை காரை ஓட்டிவிட்டு, மீண்டும் அதிகாலையிலேயே தயாராகிவிடுவார். திருச்சிக்கு வரும் போதெல்லாம் நான் பரணிகுமார் வீட்டுக்கு வராமல் இருந்தது இல்லை. மகளிர் அணி மாநாடு ஒரு பக்கம், இளைஞர் அணி மாநாடு ஒருபக்கம் என அடுத்து திருச்சியில் 10 லட்சம் பேர் திரளும் மாநாட்டை நேரு பிரமாண்டமாக நடத்த உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நான் இந்த திருமணத்திற்கு வந்து இருக்கிறேன் என்றால் பரணிகுமார் மீதும், பால கிருஷ்ணன் குடும்பத்தின் மீதும் கொண்ட பாசம், பற்று, நட்பிற்காகத்தான்.
அப்படிப்பட்ட அந்த குடும்பத்தில் குலவிளக்குகளாக இருக்கக்கூடிய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சீரும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாவேந்தர் பாரதிதாசன் எடுத்து சொல்லி இருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்கள் வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
- இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.
இந்த நிலையில், அஜித் பவார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பலர் ஒரு துயரமான விமான விபத்தில் இறந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
சோகத்தின் அளவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
- பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
- தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது சாரல் மழை, உறைபனி, உறையவைக்கும் குளிர் ஆகியவை வாட்டி எடுத்து வருகிறது.
பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர். தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது கொடைக்கானல் பகுதியில் கடல் நுரை பொங்கி எழுவது போல வெண்மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் செண்பகனூர் சிட்டி வியூ, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் வானத்தில் இருந்து மேகக்கூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிடுவது போல வந்த காட்சி வெகுவாக ரசிக்க வைத்தது.
"வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்" என்ற வைரமுத்து வரிகளுக்கேற்ப கொடைக்கானலில் தினந்தோறும் காணப்படும் ரம்யமான சூழல் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுத்து வருகிறது. அதன் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக சிறுவன் நவீனின் கையை கடித்துள்ளது.
- உடனடியாக பெற்றோர்கள் நவீனை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் நவீன் (வயது 7). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். முத்து தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நவீன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கோழியை பிடிப்பதற்காக கீரிப்பிள்ளை வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நவீனின் கையை கடித்துள்ளது. இதனால் வலி தாங்காமல் சிறுவன் கதறி துடித்துள்ளார்.
உடனடியாக பெற்றோர்கள் நவீனை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். ஆனால், தொடர் சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு நவீனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறுவனை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நவீன் காய்ச்சல் அதிகமாகி கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து உயிரிழந்தார். கீரிப்பிள்ளை கடித்து உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில், 3 மாதம் கழித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வோம்.
- விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்...
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
"விடியா ஆட்சி உங்கள்
வீட்டு Bill-லே சாட்சி"
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்... என்று கூறியுள்ளார்.
- ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.
- கூட்டணியில் கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை
அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையலாம் என்று தகவல் வெளியானது.
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய திருமாவளவன், "பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம். பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கூட்டணியில் ராமதாஸ் இணைவது பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
தற்போது மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள திருமாவளவன், "கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. சாதிய, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்ற நிலைப் பாட்டில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்பதை திருமாவளவன் மீடனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
- காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
- கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் இந்தாண்டும் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.91 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில்இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 56.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனங்களுக்கு நடுவே பயணிப்பதால் இதில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுவர்கள்.
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. அதில் 191 பயணிகள் இருந்தனர்.
மலை ரெயில் கல்லாறு-ஹல்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடர்லி ரெயில் நிலையத்தில் இருந்து 191 பயணிகளுடன் மலை ரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு சென்றதும் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- ராக்கெட் வேகத்தில் ஏறிவிட்டு, லேசாக குறைந்து வருகிறது.
- தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ராக்கெட் வேகத்தில் ஏறிவிட்டு, லேசாக குறைந்து வருகிறது.
அந்த வகையில், தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 25-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து200-க்கும் என புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ரூ.65 குறைந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும், ரூ.520 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-1-2026- ஒரு கிராம் ரூ.387
26-1-2026- ஒரு கிராம் ரூ.375
25-1-2026- ஒரு கிராம் ரூ.65
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
23-1-2026- ஒரு கிராம் ரூ.345
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
- தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம். பொதுவாக வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதும் இந்தக் குழு வரும் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டிய தேதியில் இந்தக் குழு சென்னைக்கு வருகை தரும்.
இந்த வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார். அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சிறப்பு தீவிர திருத்தப் பணியை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் (நாளை மறுநாள்) முடிகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மேலும் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர்.
வடபெரும்பாக்கம்: கன்னியம்மன் நகர், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சபரி நகர், சாம்வேல் நகர், பெருமாள் கோவில் தெரு, பாலாஜி நகர், லூர்து கார்டன், தணிகாசலம் நகர், திருமலை நகர், கிஸ்தம்மாள் நகர், கேவிடி டவுன்ஷிப்.






