என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலையுடன் நிறுத்தம்
- காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
- கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் இந்தாண்டும் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.91 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில்இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 56.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






