search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை

    • வருகிற 18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நேற்று இரவு மற்றும் இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 20-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும். இதற்காக 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீ.க்கு மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

    மேலும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை (17-ந்தேதி) தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதற்காக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்று ஈரோட்டில் அதிகபட்சமாக 102.5 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு, மேற்கு மாம்பலம், தி.நகர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, போரூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது.

    மேலும் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், அச்சரப்பாக்கம், செய்யூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×