என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • லக்னோ இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    லக்னோ அணி:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, திப்வேஷ் ரதி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஆவோஷ் கான், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சுர்யன்ஷ் ஷெட்ஜ், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், சாஹல், பெர்குசன், அர்ஷ்தீப் சிங்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வருகிற 5-ந் தேதி சேப்பாக்கத்தில் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்குகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 5-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்குகிறது.

    www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலை நீக்கி ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பிராவோ கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

    ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும்.

    நமது டி20 அணி 9-வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பவல், அணியை தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள்.

    என்று பிராவோ விமர்சித்துள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இதுவரை 37 போட்டிகளில் விளையாடி 19 வெற்றிகள் 17 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    • சென்னை 7-வது இடத்திலும், கொல்கத்தா கடைசி இடத்திலும் உள்ளது.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலையை இங்கு காணலாம்.

    2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும் உள்ளது.

    அடுத்த இடங்களில் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3-வது இடத்திலும், குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது. ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் பஞ்சாப் 5-வது இடத்தில் உள்ளது.

    6-வது இடத்தில் இருந்த கொல்கத்தா, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கடைசி இடத்தையும், 10-வது இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சென்னை 7-வது இடத்திலும், ஐதராபாத் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் 9-வது இடத்திலும் உள்ளன.

    இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கான புளு நிற தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நூர் அகமதுவிடம் உள்ளது. அவர் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்டார்க் (2 போட்டி 8 விக்கெட்), கலீல் அகமது (3 போட்டி 6 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரனிடம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சாய் சுதர்சன் 137, டிராவிஸ் ஹெட் 136 ஆகியோர் உள்ளனர்.

    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே இடம் பெற்றிருந்தார்.
    • நேற்றைய போட்டியில் மனிஷ் பாண்டே 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் இடம் பிடித்து 19 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே ஐபிஎல் வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி 2008-ம் ஆண்டில் உதயமான ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள அனைத்து தொடர்களிலும் ஆடிய தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் மனிஷ் பாண்டேவும் இணைந்துள்ளார்.

    அவர் 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
    • ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26-ம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சாம் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர்.

    அதேசமயம் மேத்யூ குஹ்னமேன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற உதவினர். இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

    அதேசமயம் முன்னதாக மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்திருந்த ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    அதேசமயம் இளம் அதிரடி வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கன்னொலி உள்ளிட்டோருக்கும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியா ஆடவர் ஒப்பந்தப் பட்டியல் 2025-26:

    சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், ஆடம் ஜாம்பா.

    • அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A+ பிரிவில் இடம் பெறுவார்கள்
    • கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி ஆகியோர் A+ பிரிவில் தக்கவைக்கப்பட உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான பிரிவாகும்.

    ஆனால் கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் உள்ளூர் போட்டிகளை தவறவிட்டதாக கூறப்பட்டு முந்தைய மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் மீண்டும் பட்டியலில் மீண்டும் இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
    • இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பட்டோடி கோப்பையை 'ஓய்வு' செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தொடரிலிருந்து இது நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.

    இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.

    • மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
    • ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை படைத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா 116 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 12-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதில் பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு மைதானத்தில் குறிப்பிட்ட ஒரு அணியை அதிக முறை வீழ்த்திய சாதனையை மும்பை படைத்துள்ளது.

    மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி 24 வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 21 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    • திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
    • பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்.

    சென்னை:

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்றது.

    சென்னை அணியில் ராகுல் திரிபாதி , ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். இதில் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ஆனால் திரிபாதி போதுமான ரன்களை குவிக்கவில்லை.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கான்வேயை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சென்னை அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. அவர்கள் அதிக தவறுகளைச் செய்கிறார்கள். ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குகிறார்கள்.

    அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள். திரிபாதி மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய வீரர். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருக்க கூடாது என்பதில் நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதற்கான நோக்கமும் தற்போது அவரிடம் தெரியவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட், சரியான தொடக்க வீரர் ஆவார். அவர் திரிபாதிக்காக 3-வது இடத்தில் களம் இறங்குகிறார். எப்போதும் தொடக்க ஜோடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு பெரிய பலமாக இருந்து வருகிறது. மேத்யூ ஹைடன், டுவைன் ஸ்மித், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக இருந்தனர்.

    தற்போது சென்னை அணியில் கான்வே இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தனர். திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் கான்வே நிச்சயமாக இடம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது. லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் (இருவரும் தலா இரு அரைசதம்), டேவிட் மில்லர் நல்ல நிலையில் உள்ளனர். மார்க்ரம், கேப்டன் ரிஷப் பண்ட், ஆயுஷ் பதோனி ஆகியோரின் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன் வரவில்லை. பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள். இந்த சீசனில் தங்களது சொந்த மைதானத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கும் லக்னோ அணி தித்திப்போடு தொடங்க தீவிரம் காட்டும்.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (97 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (47), ஷசாங் சிங் (44) ஆகியோரின் பங்களிப்பால் 243 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, 232 ரன்னில் குஜராத்தை மடக்கியது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்றில் லக்னோவும், ஒன்றில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

     அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 117 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட் ஆனார். வில் ஜாக்ஸ் 16 ரன்களில் வெறியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக ஆடியது.

    களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் விளாசி மும்பை வெற்றியை எளிதாக்கினார்.

    இதனால், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ×