என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
    • எம்.எஸ். தோனி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் டெவாய்ட் பிரேவிஸ் அறிமுகம் ஆனார். தீபக் ஹூடா, சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சமி வீசினார். முதல் பந்திலேயே ரஷீத் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து மாத்ரே உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கர்ரன் அமைதியாக நிற்க மறுபக்கம் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சாம் கர்ரன் 10 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மாத்ரே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். 6ஆவது ஓவர் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 30 ரன்கள் விளாசினார். அடுத்து பிரேவிஸ் களம் இறங்கினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சிஎஸ்கே திணறியது.

    12ஆவது ஓவரை கமிந்து மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களாக இருந்தது. அடுத்து துபே 12 ரன்னிலும், எம்.எஸ். தோனி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

    இறுதியாக 19.5 ஓவரில் 154 ரன்னில் சிஎஸ்கே ஆல்அவட் ஆனது. தீபக் ஹூடா கடைசி விக்கெட்டாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் எம்.எஸ். தோனியின் 274ஆவது போட்டியாகும்.
    • ரோகித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக் 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

    ஐபிஎல் 2025 தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

    இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக எம்.எஸ். தோனி களம் இறங்குகிறார். இந்த போட்டி எம்.எஸ். தோனிக்கு ஒட்டுமொத்தமாக 400ஆவது போட்டியாகும். இதன்மூலம் 400 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதற்கு முன்னதாக 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

    எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் இன்றைய போட்டி அவருக்கு 274 போட்டியாகும். சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவுக்காக 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • நடப்பு சாம்பியன் கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
    • மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும்.

    ஐ.பி.எல். நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு தற்போது நடைபெற்று வரும் சீசன் இதுவரை சிறப்பாக அமையவில்லை. 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம். மும்பை போன்று தொடர் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து வருவோம் என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-

    உறுதியாக எங்களால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். நீங்கள் இந்த தொடரில் சற்று பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், மும்பை இந்தயின்ஸ் கூட மோசமாக தொடரை தொடங்கியது. தற்போது தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பிளேஆஃப் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

    எங்களுக்கும் அதே மாதிரியான மனநிலை தேவை. தற்போது பாதி தொடரை கடந்துள்ளோம். நாங்கள் ஏறுக்குறைய அனைத்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. அதன்பின் 3ஆவது போட்டியில் பெற்றி பெற்றது. அதன்பின் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. பின்னர் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    • புள்ளிகள் பட்டியலில் ஐதராபாத் 9ஆவது இடத்திலும், சிஎஸ்கே கடைசி இடத்திலும் உள்ளன.
    • இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஏறக்குறைய பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சிஎஸ்கே அணி:-

    ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், ஷிவம் துபே, எம்.எஸ். தோனி, தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.

    சன்ரைசர்ஸ் ஐதராபத்:-

    அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது சமி.

    • பாகிஸ்தானுடன் இந்தியா நேரடி கிரிக்கெட் விளையாடுவதில்லை.
    • பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.

    எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டி கிடையாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதனால் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியா- பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெறக் கூடாது என ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியாக செய்திகள் வெளியானது.

    ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லாவிடம் கேட்டபோது, "இந்த சூழ்நிலையில் அரசின் ஆலோசனைகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மற்றொரு பிசிசிஐ அதிகாரி, இதுபோன்ற சூழ்நிலை தனக்கு புதிது. தற்போதைய பொது மனநிலையை பிசிசிஐ அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். பரவி வரும் செய்திகளுக்கு எந்த மதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

    • அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும்.
    • ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.

    இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 17ஆவது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஹெட்மையரை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி 3 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை புவி வீசினார். இந்த ஓவரில் ராஜஸ்தான் 22 ரன்கள் விளாசியது. இதனால் ராஜஸ்தானுக்கு கடைசி 2 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் எளிதாக வெற்றி பெறும் ரசிகர்கள் நினைத்தனர்.

    இந்த நிலையில்தான் 19ஆவது ஓவர் ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதுதான் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே அடிக்க ஆர்சிபி 11 ரன்னில் வெற்றி பெற்றது.

    சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர், ஹேசில்வுட்டை புகழந்துள்ளார்.

    இது தொடர்பாக ஆண்டி பிளவர் கூறுகையில் "ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். எந்தவொரு வடிவிலான போட்டியிலும் நெருக்கடியான நிலையில் சிறந்தவர். அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன.

    யார்க்கர், வைடு யார்க்கர், ஸ்லோ-பால் என அசத்துகிறார். சரியான நேரத்தில் எந்த வகையான பந்தை வீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த சீசனில் புவி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக யாஷ் தயால் அட்டகாசமாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அசத்தினார்.

    இவ்வாறு ஆண்டி பிளவர் தெரிவித்தார்.

    • 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது.
    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. 7-வது ஆட்டத்தில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயித்த 177 ரன் இலக்கை மும்பை 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சென்னை அணியால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை.

    சென்னை அணிக்கு இனிமேல் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே 2010-ம் ஆண்டு போல் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    சென்னை அணியில் பேட்டிங் பெரும் தலைவலியாக இருக்கிறது. ஷிவம் துபே (230 ரன்) தவிர யாரும் 200 ரன்னை கடக்கவில்லை. விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். கடந்த ஆட்டத்தில் அறிமுகமான 17 வயது ஆயுஷ் மாத்ரே துரிதமாக 32 ரன்கள் எடுத்து கவனத்தை ஈர்த்தார். புதிதாக அணிக்கு அழைக்கப்பட்ட அதிரடி வீரர் டிவால்ட் பிரேவிஸ் (தென்ஆப்பிரிக்கா) களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் தகிடுதத்தம் போட்டு வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்த ஐதராபாத் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) தோற்றது. 6-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அடுத்து மும்பைக்கு எதிரான 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வி கண்டது.

    புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணிக்கும் இனி வரும் அனைத்து ஆட்டங்களும் இன்றியமையானதாகும். ஒன்றில் தோற்றால் கூட அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென் (281 ரன்), டிராவிஸ் ஹெட் (242), அபிஷேக் ஷர்மா (240), இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தான் அந்த அணி தடுமாறி வருகிறது. ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், முகமது ஷமி, இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி ஓரளவு நன்றாக பந்து வீசுகின்றனர்.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் இங்கு வீழ்ந்த 50 விக்கெட்டுகளில் 27-ஐ சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 6 ஆட்டங்களில் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. சேப்பாக்கத்தில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான 5 ஆட்டங்களிலும் சென்னை அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், டோனி (கேப்டன்), ஜாமி ஓவர்டான் அல்லது டிவால்ட் பிரேவிஸ், ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் சாஹர் அல்லது ஜீஷன் அன்சாரி, காமிந்து மென்டிஸ் அல்லது இஷான் மலிங்கா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியர்களான நம் அனைவரையும் பாதித்துள்ளது.

    குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும் (பயங்கரவாதிகள்), அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

    இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவே நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.

    • நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம்.
    • ஆனால் பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்சிபி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது.

    ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.

    கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். பில் சால்ட் 26 ரன்னும், டிம் டேவிட் 23 ரன்னும், ஜிதேஷ் சர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ரன்னில் அவுட்டானார்.

    நிதிஷ் ரானா 28 ரன்னும், ரியான் பராக் 22 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி திரில் வெற்றி பெற்றது. இது ஆர்சிபி அணியின் 6வது வெற்றி ஆகும். ராஜஸ்தான் அணியின் 7வது தோல்வி இதுவாகும்.

    ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பவர்பிளேயில் ஆர்சிபி ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.
    • விராட் கோலி 42 பந்தில் 70 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 42ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆர்.சி.பி. அணி தனது சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

    அதன்படி விராட் கோலி, பில் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக, அதுநேரம் விக்கெட் இழக்காமல் விளையாடினர். முதல் ஓவரில் ஆர்சிபி-க்கு 11 ரன்கள் கிடைத்தன. 2ஆவது ஓவரில் 7 ரன்களும், 3ஆவது ஓவரில் 10 ரன்களும், 4ஆவது ஓவரில் 9 ரன்களும் கிடைத்தன. 5ஆவது ஓவரில் 3 பவுண்டரியுடன் 14 ரன்களும், 6ஆவது ஓவரில் 8 ரன்களும் கிடைத்தன. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் சிக்சர் இல்லாமல், அதேவேளையில் விக்கெட் இழக்காமல் 59 ரன்கள் அடித்தது ஆர்சிபி.

    அடுத்த ஓவரை ஹசரங்கா வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் சால்ட் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அடுத்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார்.

    இவர் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 12ஆவது ஓவரி 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்து 32 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    14ஆவது ஓவரை பராக் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தேவ்தத் படிக்கல் சிக்சருக்கு தூக்கினார். இதன்மூலம் ஆர்.சி.பி.க்கு முதல் சிக்ஸ் கிடைத்தது. இதேஓவரில் விராட் கோலி ஒரு சிக்ஸ் அடித்தார். தேஷ்பாண்டே வீசிய 15ஆவது ஓவரில் ஆர்சிபி 3 சிக்சர்கள் விளாசின. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தேவ்தத் படிக்கல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் ஆர்சிபி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார்.

    3ஆவது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தேவ்தத் படிக்கல்லும் (50), 5ஆவது பந்தில் ரஜத் படிதாரும் (1) ஆட்டமிழந்தார்.

    18ஆவது ஓவரில் 14 ரன்களும், 19ஆவது ஓவரில் 16 ரன்களும் ஆர்சிபி-க்கு கிடைக்க 4 விக்கடெ் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

    • ஆர்சிபி 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.
    • சின்னசாமியில் டாஸ் தோற்ற 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 42ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி சொந்த மைதானமாக சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக டாஸ் தோற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    ஆர்சிபி:-

    பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிக்கல், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரொமாரியோ ஷெப்பர்டு, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

    ×