என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    என்ன சாதித்து விட்டீர்கள்?- பஹல்காம் தாக்குதலுக்கு கவாஸ்கர் கண்டனம்
    X

    என்ன சாதித்து விட்டீர்கள்?- பஹல்காம் தாக்குதலுக்கு கவாஸ்கர் கண்டனம்

    • பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியர்களான நம் அனைவரையும் பாதித்துள்ளது.

    குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும் (பயங்கரவாதிகள்), அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

    இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவே நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.

    Next Story
    ×