என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம்.
- ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை.
ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 154 ரன்களில் ஆல்அவுட்டாகி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை. இதனால் தோல்வியை சந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
"மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம். ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழ் வரை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
- நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோ, பஞ்சாப், குஜராத் அணிகளிடம்) கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம்) 5-வது இடத்தில் இருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
- ஜாக் காலிஸ், கேஎல் ராகுல், பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஐதராபாத் அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதுவரை அவர் 4 விக்கெட்டுகளை முதல் பந்திலேயே பந்தில் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஜாக் காலிஸ், கேஎல் ராகுல் மற்றும் பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
முகமது ஷமிக்கு அடுத்தபடியாக லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே 3 முறை விக்கெட் எடுத்துள்ளனர்.
- சி.எஸ்.கே. அணியில் அறிமுகமான பிரேவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
- கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து கேப்டன் கம்மின்ஸ் அவரை மேலே தூக்கி பாராட்டினார்.
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சி.எஸ்.கே. அணியில் அறிமுகமான பிரேவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
குறிப்பாக கமிந்து மெண்டிஸ் வீசிய 12ஆவது ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அதே ஓவரில் அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் சூப்பர் மேன் போல பறந்து கேட்ச் பிடித்தார். இதனால் பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து கேப்டன் கம்மின்ஸ் அவரை மேலே தூக்கி பாராட்டினார்.
கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச் இந்த சீசன் மட்டுமல்ல மொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிக சிறந்த கேட்ச் என நெட்டிசன்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
மேலும், கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறிய சூழ்நிலை காணப்பட்டாலும், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்றே இருக்கத்தான் செய்கிறது.
தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்கும் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அதிக வெற்றிகளை பெறவேண்டும். இதனால் இரு அணிகளும் 20 புள்ளிகளைத் தாண்டினால் கீழ் வரிசையில் இருக்கும் அணிக்கு அது சாதகமாக மாறும்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அதிக வெற்றியைப் பெறுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
பெங்களூரு, மும்பை, பஞ்சாப், லக்னோ அணிகள் வரும் போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவ வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் அசத்தலாகப் பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்வியின் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது.
குஜராத் முதல் இடத்திலும், டெல்லி 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.
பஞ்சாப் 5வது இடத்திலும், லக்னோ 6வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும், ஐதராபாத் 8வது இடத்திலும், ராஜஸ்தான் 9வது இடத்திலும் உள்ளனர்.
- முதலில் ஆடிய சி.எஸ்.கே. 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஐதராபாத் 155 ரன்கள் எடுத்து வென்றது.
சென்னை:
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் தோனி பேசியதாவது:
நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 154 ரன்கள் எடுத்தது போதுமான ஸ்கோராக இல்லை.
இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது. அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர். ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.
பிரேவிஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் எங்களுக்கு அது தேவைப்பட்டது என நினைக்கிறேன்.
சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்ட மிடில் ஆர்டரில் நமக்கு அது போன்ற பேட்ஸ்மேன் தேவை. பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம்.
இதுபோன்ற ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இடைவெளிகளை அடைப்பது நல்லதுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ந்து முன்னேற முடியாது. நாங்கள் போதுமான ரன்களை பலகையில் வைக்கவில்லை என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ஐதராபாத் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி ஆகும். சென்னை அணிக்கு கிடைத்த 7-வது தோல்வி இது.
- ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயது 283 நாட்கள் ஆகிறது.
- ஷேக் ரஷீத்துக்கு 20 வயது 213 நாட்கள் ஆகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 154 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரேவும், ஷேக் ரஷீத்தும் களம் இறங்கினார்கள். இருவருக்கும் சேர்த்து 38 வயது 141 நாட்கள் ஆகிறது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் 2ஆவது மிகவும் இளம் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர். ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயது 283 நாட்கள் ஆகிறது. ஷேக் ரஷீத்துக்கு 20 வயது 213 நாட்கள் ஆகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி- ஜெய்ஸ்வால் ஜோடி லக்னோவிற்கு எதிராக 37 வயது 145 நாட்களில் களம் இறங்கி மிகவும் இளம் தொடக்க ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
ரிஷப் பண்ட்- சஞ்சு சாம்சன் (டெல்லி) ஆர்பிஎஸ் (2016) அணிக்கு எதிராக 40 வயது 34 நாட்களில் தொடக்க ஜோடியாக களம் இறங்கினர்.
ரிஷப் பண்ட்- டி காக் (டெல்லி) குஜராத் லயன்ஸ் (2016) அணிக்கெதிராக 41 வயது 359 நாட்களில் களம் இறங்கினர்.
பிரித்வி ஷா- ஷ்ரேயாஸ் அய்யர் (டெல்லி) சிஎஸ்கே-வுக்கு (2018) எதிராக 41 வயது 364 நாட்களில் களம் இறங்கினர்.
- பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
- எம்.எஸ். தோனி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் டெவாய்ட் பிரேவிஸ் அறிமுகம் ஆனார். தீபக் ஹூடா, சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சமி வீசினார். முதல் பந்திலேயே ரஷீத் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து மாத்ரே உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கர்ரன் அமைதியாக நிற்க மறுபக்கம் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாம் கர்ரன் 10 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மாத்ரே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். 6ஆவது ஓவர் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 30 ரன்கள் விளாசினார். அடுத்து பிரேவிஸ் களம் இறங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சிஎஸ்கே திணறியது.
12ஆவது ஓவரை கமிந்து மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களாக இருந்தது. அடுத்து துபே 12 ரன்னிலும், எம்.எஸ். தோனி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியாக 19.5 ஓவரில் 154 ரன்னில் சிஎஸ்கே ஆல்அவட் ஆனது. தீபக் ஹூடா கடைசி விக்கெட்டாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் எம்.எஸ். தோனியின் 274ஆவது போட்டியாகும்.
- ரோகித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக் 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக எம்.எஸ். தோனி களம் இறங்குகிறார். இந்த போட்டி எம்.எஸ். தோனிக்கு ஒட்டுமொத்தமாக 400ஆவது போட்டியாகும். இதன்மூலம் 400 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதற்கு முன்னதாக 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் இன்றைய போட்டி அவருக்கு 274 போட்டியாகும். சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவுக்காக 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- நடப்பு சாம்பியன் கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
- மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும்.
ஐ.பி.எல். நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு தற்போது நடைபெற்று வரும் சீசன் இதுவரை சிறப்பாக அமையவில்லை. 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம். மும்பை போன்று தொடர் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து வருவோம் என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-
உறுதியாக எங்களால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். நீங்கள் இந்த தொடரில் சற்று பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், மும்பை இந்தயின்ஸ் கூட மோசமாக தொடரை தொடங்கியது. தற்போது தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பிளேஆஃப் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கும் அதே மாதிரியான மனநிலை தேவை. தற்போது பாதி தொடரை கடந்துள்ளோம். நாங்கள் ஏறுக்குறைய அனைத்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. அதன்பின் 3ஆவது போட்டியில் பெற்றி பெற்றது. அதன்பின் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. பின்னர் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.






