என் மலர்
விளையாட்டு
- ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு அணியின் கேப்டன் எம்எஸ் டோனி ஆட்டோகிராப் போட்டார். நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பொறுமையாக நின்று அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டு மகிழ்ந்தார்.
இந்த வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என தலைப்பிட்டிருந்தது. இந்த வீடியோவுக்கு லைக்குகள், கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அவரை அருகில் நின்று பார்ப்பதற்கும் செல்பி எடுத்துக் கொள்ளவும் நிறைய ரசிகர்கள் தவம் கிடக்கும் நிலையில் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது உண்மையாகவே வரம்தான்.
- ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
- இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோயை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அதில் சச்சின் மகன் அர்ஜூன் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பந்து வீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலாக ஒரு கமெண்ட் செய்தனர். அதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் யார்க்கர் பந்தில் இஷான் போல்ட் முறையில் வெளியேறுவார். அந்த வீடியோவை பதிவிட்டு இஷான் பிளாஸ்பேக்கை நினைவுப்படுத்திகிறார் என கமெண்ட் செய்தனர்.
இன்னும் ஐபிஎல் தொடருக்கு சில நாட்களே உள்ள நிலையில் மும்பை - சிஸ்கே அணி குறித்த கேலி கிண்டலான பதிவுகள் சமூக வலைதளங்களில் வர ஆரபித்துவிட்டது.
- கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- இங்கிலாந்து எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த 4 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் தொடரை (4-1) வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது.
இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பல கருத்துக்கள் வெளியாகின.
இந்நிலையில் அந்த மோதலில் இதுதான் நடந்தது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன்.
மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700-வது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தோம்.
இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.
இதனை தொடர்ந்து கில்லுடன் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டசனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். அதற்கு அதனால் என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். அத்துடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
- மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
- டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
டெல்லி:
2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அந்த வகையில், டெல்லியில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது.
- மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்ற தகவல், உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அவர் அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார்.
இவ்வாறு ப்ராட் கூறினார்.
- ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
- சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.
இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.
ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.
ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.
அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.
கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.
- ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
- இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் பிரசித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த நிலையில், கடந்த சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- சச்சினின் 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.
- இந்த ஆட்டத்தை சச்சின், வெங்சர்க்கார் உள்ளிட்டோர் நேரில் பார்த்தார்.
மும்பை:
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னும், விதர்பா 105 ரன்னும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.
முஷீர் கான் 51 ரன்னுடனும், கேப்டன் அஜிங்யா ரஹானே 58 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முஷீர் கான், ரஹானே தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரஹானே 73 ரன்னில் (143 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கரிடம் சிக்கினார். இதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார்.
மறுமுனையில் நிலைத்து நின்று பொறுமையாக ஆடிய முஷீர் கான் 255 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், 19 வயதான முஷீர் கான் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். இதற்கு முன்பு 1994-95-ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தை டெண்டுல்கர் நேரில் பார்த்த காட்சி. அருகில் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளார்.
இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளிட்டோருடன் அமர்ந்து நேரில் பார்த்தார். அவர் முன்னிலையிலேயே முஷீர் கான் சாதனையை தகர்த்தார். இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் அறிமுகமான சர்ப்ராஸ்கானின் தம்பியான முஷீர் கான் பரோடாவுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி இருந்தது நினைவிருக்கலாம். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.
அணியின் ஸ்கோர் 332 ரன்னாக உயர்ந்த போது வேகமாக மட்டையை சுழற்றிய ஸ்ரேயாஸ் அய்யர் 95 ரன்னில் (111 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆதித்ய தாக்கரே பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில் முஷீர் கான் 136 ரன்னில் (326 பந்து, 10 பவுண்டரி) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
முடிவில் மும்பை அணி 130.2 ஓவர்களில் 418 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஷம்ஸ் முலானி 50 ரன்னுடன் (85 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டெய்ட் 3 ரன்னுடனும், துருவ் ஷோரேய் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். வலுவான நிலையில் இருக்கும் மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
- சென்னை அணியின் கேப்டன் 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்கு.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், 'கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் (டோனி) விட்டுவிடுங்கள் என்று என்.சீனிவாசன் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். எனவே அவர்கள் (கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன. அதுவரை அமைதியாக இருங்கள். நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்கு. அதில் தான் எங்களது கவனம் இருக்கும்' என்றார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவான் லீயுடன் மோதினார்.
முதல் செட்டில் பிவி சிந்து 21-10 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது காயம் காரணமாக யுவான் லீ போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிவி சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 2வது சுற்றுக்கும் முன்னேறினார்.
- வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
- இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்னும், 2வது இன்னிங்சில் 418 ரன்னும் எடுத்தது.
- விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை:
89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.
மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






