என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021-ம் ஆண்டில் இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வானார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐ.பி.எல். மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 50 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 1,326 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கு, சுருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. மூன்று சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அனஸ்டாசியாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொண்டார். இதில் கோகோ காப் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
    • விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

    விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக் கொண்டார்.

    விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • ஏற்கனவே 3 இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது.

    ஏற்கனவே நடந்த தகுதிச்சுற்று ஒன்றில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இதற்கிடையே, மற்றொரு தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.

    ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத் பவார் (54 கிலோ), லாவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்னர்.

    இந்நிலையில், 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீரர் ஆவார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்
    • ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை சிங்கப்பூர் ஓபன் 2024 மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் வெளிப்படுத்தினார். காய்த்ரியும் அவரது ஜோடியான திரிஷா ஜாலியும் இணைந்து தென் கொரியா ஜோடியான கிம் செய்- யங் மற்றும் கொங் ஹீ - யங் உடன் நேற்று போட்டியிட்டனர்.

    ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் காயத்ரி செய்த செயல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    மூன்றாவது செட்டில் இந்திய அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் தீவிரம் அடைந்துக் கொண்டு இருக்கும் பொழுது ஆட்டத்தின் நடுவே காயத்ரி கோபிசந்த் அவரது ரேக்கட்டை மாற்றி 4-2 என்று ஸ்கோர் எடுத்து கால் இறுதி சுற்றில் வென்றனர். அந்த பரபரப்பான ஆட்டத்திலும் காய்த்ரி இந்த செயலை செய்தது விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    அதைத்தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

    அரை இறுதி ஆட்டத்தில் இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.
    • உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். கடந்த மே 30 ஆம் தேதி நடந்த 3-வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டு வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    இதைத்தொடர்ந்து கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    இந்நிலையில் இரண்டு உலக சாம்பியன்களை அனாயசமாக வென்றுகாட்டிய பிரக்ஞானந்தாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "உலகின் நம்பர் 1 மற்றும் நபர் 2 செஸ் வீரர்களை வீழ்த்தி நார்வே செஸ் தொடரில் அபாரமான வெற்றியை பிரக்ஞானந்தா பெற்றுள்ளது வியக்கவைக்கிறது. வெறும் 18 வயதில் இதை நிகழ்த்திக்காட்டிய நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் படைப்பீர்கள்.. நமது மூர்வண தேசியக் கொடியை உலக அரங்கில் உயரத்தில் பறக்கச்செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
    • நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    கயானா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.

    2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

    2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.

    இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.

    • நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா.
    • மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்தியன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். கருவானா கேண்டிடேட்ஸ் சாம்பியனும் ஆவார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், ஃபாபியோனாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார். செஸ் உலகமே இவரின் திறமையை பார்த்து வியக்கிறது என கூறியுள்ளார்.


    • இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    • நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    டல்லாஸ்:

    9-வது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மகாணத்தில் இருக்கும் டல்லாசில் இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. அமெரிக்காவில் முதன் முறையாகவும், வெஸ்ட் இண்டீசில் 2-வது தடவையாகவும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. தொடக்க வீரரான நவநீத் தல்வால் 44 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) நிக்கோலஸ் கிர்டன் 31 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் மோவா 16 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அலிகான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    195 ரன் என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களம் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் கலீம்சானா பந்துவீச்சில் வெளியேறினார்.

    7-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான மோனக் படேல் 16 ரன்னில் தில்லான் ஹெய்லிகர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அமெரிக்க அணி 6.3 ஓவர்களில் 42 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்து திணறியது. 3-வது விக்கெட்டான ஆண்ட்ரிஸ் கூஸ்-ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி அமெரிக்க அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது.

    வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் இந்த ஜோடி பிரிந்தது. ஆந்த்ரே கூஸ் 65 ரன்னில் நிகில் தத்தா பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 46 பந்தில் 7 புவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 173 ஆக இருந்தது. 3-வது விக்கெட் ஜோடி 131 ரன் எடுத்தது. அடுத்து கோரி ஆண்டர்சன் களம் வந்தார்.

    அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 195 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. ஆரோன் ஜோன்ஸ் 40 பந்தில் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

    அமெரிக்க அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதே டல்லாஸ் மைதானத்தில் தான் அந்த போட்டியும் நடக்கிறது. கனடா அணி 2-வது போட்டியில் அயர்லாந்தை வருகிற 7-ந் தேதி சந்திக்கிறது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் 7-5 ,6-7 (6-8), 2-6 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த 30-ம் நிலை வீரரான லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி 4-வது ரவுண்டுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் ( ஜெர்மனி), 5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்), நான்காம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா ( கஜகஸ்தான்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் உள்ள சீனாவை சேர்ந்த கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த எலினா அவனேசியன் 3-6, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    • 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
    • தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்தது .

    தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணியின் நவ்நீத் தலிவால்,நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் அமெரிக்கா அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்தனர்.

    தொடர்ந்து நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.கடைசியில் ஷ்ரேயாஸ் மொவ்வா அதிரடி காட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா விளையாடுகிறது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் தொடங்கியது.

    வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ×