என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.
- கேப்டன் ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் ஷான் மசூத், பாபர் அசாம் ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 251 பந்துகளை சந்தித்து 145 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 58 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதில் அசார் மஹ்மூத் 136 ரன்னும், தவுபீக் உமர் 135 ரன்னும் எடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்னுடனும், விராட் கோலி 153 ரன்னுடனும் முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர்.
- Deputy Chief Minister Udhayanidhi Stalin gave Rs. 26.69 crore as incentives to 1,021 sportspersons
- விளையாட்டு அரங்கம், விளையாட்டு அகாடமிக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.1.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் காமன்வெல்த் வாள்வீச்சு மற்றும் செஸ் போட்டி, ஆசிய அளவிலான தடகளம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், நீச்சல் போட்டி, ஆசிய மற்றும் சர்வதேச ஸ்குவாஷ், பாரா பாட்மிண்டன் போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர் (International Master) பட்டம் பெற்ற செஸ் வீரர்கள், தேசிய அளவிலான தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ரோலர் ஸ்கேட்டிங், வூஷு (Wushu), சாப்ட் டென்னீஸ் (Soft Tennis), சைக்கிளிங், பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பாரா தடகளம், பாரா நீச்சல், பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் மற்றும் தேசிய பள்ளிக் குழுமப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 26.69 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய தடகள போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, தேசிய பள்ளிக் குழுமப் போட்டி உள்ளிட்ட சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் (Sports Hostel), உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (Elite Sportspersons Scheme), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் வீரர், வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் மைல்கல்லாக, மிகப் பெரிய எழுச்சியாக போற்றப்படுகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்றதிலிருந்து (7.5.2021 முதல்) இதுநாள் வரை சர்வதேச, ஆசிய, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்கங்கள் வென்ற 4,352 வீரர், வீராங்கனைகளுக்கு 143.85 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட பணிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 42.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி,
திருச்சிராப்பள்ளி, மதுரை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட விளையாட்டு அரங்க வளாகங்கள், சேலம் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டரங்க வளாகம் ஆகியவற்றில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய பாரா விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூ. 4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அர்ஜூனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் திரு.ஞா.சத்யன், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பராலிம்பிக்ஸ் பதக்க வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையிலா் கூறப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.
- 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இங்கிலாந்து அரசியல்வாதிகள் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.
- சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா இடம் பெற்றுள்ளார்.
- சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் மந்தனா இடம் பெற்றுள்ளார்.
ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நோன்குலுலேகோ லபா, ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்ட், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்துடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியால் புறக்கணிக்கப்படும் வீரரான சஞ்சு சாம்சனுக்கு இந்த முறையும் ஐசிசி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் வடிவத்தில் நடப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்துடன் விளையாட உள்ளது. இதில் டி20 தொடரில் மட்டுமே சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகிய நிலையில், சாம்சன் தான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசினார். அந்த வீடியோவை பதிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
- நமது சிறந்த வீரர்களை பற்றி நாம் தவறாகப் பேசுகிறோம்.
இந்திய கிரிக்கெட் அணி பல தொடர்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல விமர்சனங்கள் இந்திய அணி மீது எழுந்தது. மேலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணம் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். நமது சிறந்த வீரர்களை பற்றி நாம் தவறாகப் பேசுகிறோம். மக்கள் கடந்த காலத்தில் அவர்கள் சாதித்ததை மறந்துவிடுகிறார்கள். சரி, அவர்கள் தோற்றார்கள், அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
வீரர்களை விமர்சிப்பது மிகவும் எளிதானது. எங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என யுவராஜ் கூறினார்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.
- 2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.
- பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காவில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் அனாகத் சிங்குடன் எகிப்து நாட்டை சேர்ந்த மலிகா எல் கராக்ஸி மோதினார்.
17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக டெல்லியை சேர்ந்த அனாகத் சிங் பங்கேற்றார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அனாகத் ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அனாகத் சிங்குடன் எகிப்து நாட்டை சேர்ந்த மலிகா எல் கராக்ஸி மோதினார்.
முதல் செட்டை அனாகத் 4-11 என்ற கணக்கில் இழந்தார். அடுத்த செட்டை 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-11 என்ற மீண்டும் இழந்தார். இதனையடுத்து நம்பிக்கையுடன் களமிறங்கிய அனாகத் 4-வது மற்றும் 5-வது செட்டை 11-5, 11-3 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

இதன்மூலம் 4-11, 11-9, 6-11, 11,5, 11-3 என்ற செட் கணக்கில் மலிகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை அனாகத் வென்றார். 16 வயதான் அனாகத் இதற்கு முன்பு U-11 மற்றும் U-15 ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு U-17 போட்டியின் இறுதிபோட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள்.
2021-ம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
- பந்துவீச்சு பயிற்சியாளரிடமும என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.
காம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடரை வென்ற பிறகு தற்போது தொடரை இழந்துள்ளது. இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் பயிற்சியாளர் காம்பீர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.
இந்த நிலையில் தொடர் தோல்வி குறித்து காம்பீரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கம் கேட்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி வெவ்வேறு பயிற்சியாளர்களை கொண்ட குழுவை பெற்றுள்ளது. அவர்களின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. இந்திய அணி தொடர் தோல்வியை தழுவி வருகிறது. பயிற்சியாளர்கள் குழு என்ன செய்து கொண்டு இருந்தது. இது தொடர்பாக காம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவிடம் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பேட்டிங் மிகவும் சாதாரணமாக இருந்தது. இதுபற்றி பேட்டிங் பயிற்சியாளரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படவில்லை. பந்து வீச்சாளர்கள் தான் சொல்வதை கேட்கவில்லை என்று பந்துவீச்சு பயிற்சியாளர் சொன்னால் நீங்கள் பவுலர்களிடம் விசாரிக்க வேண்டும். பந்துவீச்சு பயிற்சியாளரிடமும என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.
காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும், உதவி பயிற்சியாளராக ரியான் டென்னும், பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கலும், பீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் உள்ளனர்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றனர்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்டின் முதல் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடியும் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் ஜோடியும் மோதின. இதில் 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
- தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கெல்டன் 259 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது. 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் 478 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சிறிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட்டில் தோல்வியே கண்டதில்லை. அவரது கேப்டஷிப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 9 டெஸ்ட்டில் விளையாடி உள்ளது. இதில் 8-ல் வெற்றியும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இதன்மூலம் டெஸ்ட்டில் முதல் தோல்விக்கு முன் அதிக வெற்றிகளை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் என்ற மாபெரும் சாதனையை பவுமா படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஹசிம் அம்லா 2-வது உள்ளார். இவர் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வியும் அடைந்ததில்லை. இந்த சாதனையை பவுமா (9 போட்டிகள்) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






