என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அவர்கள் சாதித்ததை மக்கள் மறந்துவிடுகிறார்கள்: கோலி- ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
- நமது சிறந்த வீரர்களை பற்றி நாம் தவறாகப் பேசுகிறோம்.
இந்திய கிரிக்கெட் அணி பல தொடர்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல விமர்சனங்கள் இந்திய அணி மீது எழுந்தது. மேலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணம் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். நமது சிறந்த வீரர்களை பற்றி நாம் தவறாகப் பேசுகிறோம். மக்கள் கடந்த காலத்தில் அவர்கள் சாதித்ததை மறந்துவிடுகிறார்கள். சரி, அவர்கள் தோற்றார்கள், அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
வீரர்களை விமர்சிப்பது மிகவும் எளிதானது. எங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என யுவராஜ் கூறினார்.






