என் மலர்
விளையாட்டு
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 3-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-6 (8-6) என மெத்வதேவும், 2வது செட்டை 7-5 என முல்லரும் வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 6-2 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய குஜராத் 20 ஓவரில் 217 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜாஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ரியான் பராக் இணைந்தார். ரியான் பராக் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹெட்மயர் தனி ஆளாகப் போராடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்து 52 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நிங்போ:
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் எஸ்தர் நுருமி வர்தயோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் சேர்த்தனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 23ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 2 ரன் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அடுத்து சாய் சுதர்சன் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் ஓவருக்கு தலா 10 ரன்கள் என்ற அடிப்படையில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 96 ரன்களாக இருக்கும்போது பட்லர் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11 ஓவரின் 100 ரன்னைத் தொட்டது. பட்லர் ஆட்டமிழந்ததும் ஷாருக்கான் களம் இறங்கினார். இவர் 20 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரூதர்போர்டு 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.2 ஓவரில் 187 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் ராகுல் டெவாட்டியா உடன் ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். இவர் 19ஆவது ஓவரின் 3 பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 23ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:-
சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், த்ருவ் ஜுரெல், ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, பரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
- 16-21, 21-12, 11-21 என சீனாவின் ஜு குயாங் லுவிடம் வீழ்ந்தார்.
- கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், சீனாவின் ஜு குயாங் லு-வை எதிர்கொண்டார்.
இதில் 16-21, 21-12, 11-21 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்ததார்.
மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப், அனுபமா உத்யாயா தொடக்க சுற்றுடன் வெளியேறினர். ஆகார்ஷி 13-21, 7-21 என தோல்வியடைந்தார். அனுபமா 13-21, 14-21 என தோல்வியடைந்தார்.
- பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது.
- ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடினால் அனைத்து ரசிகர்களும் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு பிஎஸ்எல் தொடரை பார்க்க வந்து விடுவார்கள் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள். அந்த வகையில் பிஎஸ்எல் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினால் பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு எங்களைப் பார்ப்பார்கள். அதே சமயம் தேசிய அணி நன்றாக செயல்படாத போது அது பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் பாகிஸ்தான் நன்றாக செயல்படும் போது பிஎஸ்எல் தொடரின் மவுசும் ஏற்றத்தை நோக்கிச் செல்லும். தற்போது பாகிஸ்தான் அணியின் முடிவுகள் சிறப்பாக இல்லை. இருப்பினும் அணியில் நிறைய புது முகங்கள் இருக்கின்றனர். எனவே அணி நிர்வாகத்திற்கும் கொஞ்சம் நேரம் தேவை. எது தவறாக சென்றது எங்கே தவறு நடந்தது என்பதை அறிந்து வீரர்கள் முன்னேறுவார்கள்.
என்று கூறினார்.
பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன.
- சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8-வது இடத்திலும், சிஎஸ்கே அணி 9-வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது.
- தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
- இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.
பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.
ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.
சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
என்று வாட்சன் கூறியுள்ளார்.
- ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
- ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் விராட் கோலி விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 200 -க்கும் கூடுதலாக ரன்களை குவிப்பது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
இந்த ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த அளவுக்கு ஆர்சிபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விளையாடி வருகிறார். அவருக்காக இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அணியின் ரசிகர்கள் வரை வேண்டி கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் படத்தை உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஜான் சீனா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் ஜான் சீனாவின் பிரபலமான ஸ்டைலில் கைகளை அசைப்பார். அதுபோல விராட் கோலி சுண்டு விரலில் ஒரு மோதிரம் அணிவித்தபடி கைகளை வைத்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
ஜான் சீனா ஒரு பிரபல அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் WWE (World Wrestling Entertainment) உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் 16 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
- மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.






