என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி மேத்யூஸ் வெளியேறினார்.
    • இதனையடுத்து 41 ஓவரில் ஒரு பந்தை மட்டும் சந்தித்து 99 ரன்களுடன் மீண்டும் Retired hurt ஆகி வெளியேறினார்.

    ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 45 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மேத்யூஸ் தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து 41 ஓவர் 3 பந்தில் களமிறங்கிய அவர், அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடித்த உடனே தசைப்பிடிப்பு காரணமாக கீழே விழுந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-ல் கொண்டு சென்றனர். 4-வது பந்தில் 9-வது விக்கெட் இழந்ததால் மீண்டும் மேத்யூஸ் களமிறங்க வேண்டி இருந்தது. இதனால் அணியின் வெற்றிக்காக மீண்டும் களமிறங்கிய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்தில் 114 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    எனினும் அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

    உடல் மோசமாக இருந்தாலும் அணிக்காக விளையாடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    நிங்போ:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்று கணக்கில் வென்றனர். யார் வெற்றியாளர் என்ற கடைசி சுற்றில் பிவி சிந்து தோல்வியடைந்தார். இதனால் அகானே யமகுச்சி 21-11, 16-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் ராயுடு விளையாடியுள்ளார்.
    • 2023-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அம்பதி ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி கேட்டுக்கொண்டார்.

    ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி 9-வது இடத்தில் உள்ளன. சிஎஸ்கே பேட்டிங் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதனை செய்யமுடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய ராயுடு, அணிக்கும் தோனிக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்மறையான செய்திகள் பரவி வந்தன. 

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன், இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து ராயுடு கூறியதாவது:-

    நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.

    எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பி.ஆர்-களில் பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்.

    என அம்பதி ராயுடு கூறினார்.

    • இந்திய மகளிர் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
    • இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுகிறது.

    இந்திய மகளிர் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஏப்ரல் 26-ந் தேதி தொடங்கி மே 4-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுகிறது. அதனை தொடர்ந்து நடக்கும் 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடன் மோதுகிறது.

    ஆஸ்திரேலியா ஏ அணியுடனான போட்டி ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனான போட்டி மே 1, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

    • சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது.
    • ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 4-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது

    சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் (சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டிகர்) 18 ரன்னிலும் தொடர்ச்சியாக தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது போட்டியில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் 4-வது போட்டியாகும்.

    தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது.

    சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெற்றி வரை நெருங்கினாலும் தோல்வியால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சி.எஸ்.கே. வீரர்கள் அதிரடியாக ஆடுவது அவசியம். தோனி அளவுக்கு கூட மற்ற பேட்ஸ்மேன்களால் சிக்சர்களை வெளிப்படுத்த இயலவில்லை. மற்ற அணிகளில் இருப்பது போல இளமையான அதிரடியாக ஆடக்கூடிய வீரர் தான் அணிக்கு தேவை. இல்லையென்றால் தற்போது இருக்கும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவது மிகவும் அவசியமாகும்.

    நாளை போட்டியிலாவது வெற்றியை தேடி தரமாட்டார்களா? என்ற ஆதங்கத்துடன் சி.எஸ்.கே.வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

    கொல்கத்தா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.

    6-வது இடத்தில் உள்ள அந்த அணி ராஜஸ்தான் (8 விக்கெட்), ஐதராபாத் (80 ரன்) ஆகியவற்றை வென்றது. பெங்களூரு (7 விக்கெட்), மும்பை (8 விக்கெட்), லக்னோ (4 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கொல்கத்தா அணியில் கேப்டன் ரகானே, வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியையொட்டி பார்வையாளர்கள் மெட்ரோ ரெயிலில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்.

    ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டின் குறியீட்டை தானியங்கி எந்திரத்தில் ஸ்கேன் செய்து ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் செல்லலாம்.

    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.

    கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (ஆண்கள்,பெண்கள்) 6 அணிகள் பங்கேற்கும் என்று இன்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் அனுமதி வழங்கப்படும். பெண்கள் பிரிவிலும் இதே நிலைதான் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகும். 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் ஆகும். தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை.
    • 2-வது முறையாக ராஜஸ்தான் அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை. பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரில் அந்த அணி 30 யார்டு வட்டத் துக்குள் 5 வீரரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 2-வது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக்குக்கு ரூ.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது.

    மேலும், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இப்போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இப்போட்டியில் அட்டமிழந்த ரியான் பராக் நடுவரிடம் கோவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் பொது 7வது ஓவரை குல்வந்த் கெஜ்ரோலியா வீசினார்.

    அப்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தைத் பராக் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரில் கைகளுக்கு சென்றதாக கூறி நடுவர் அவுட் கொடுத்தார்.

    உடனடியாக பராக் மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டின் பக்கத்தில் வரும்போது பேட் தரையில் உரசியது தெரியவந்தது. ஆனால் பேட் தரையில் உரசுவதற்கு முன்பே பந்து பேட்டில் பட்டதாக கூறி மூன்றாம் நடுவரும் அவுட் கொடுத்தார்.

    இதனால் கோபமடைந்த பராக் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவையும், 50 ரன் வித்தியாசத்தில் சென்னையையும் வீழ்த்தியது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையை அதன் சொந்த மண்ணில் அடக்கியது. அந்த ஆட்டத்தில் 221 ரன்கள் குவித்த பெங்களூரு அணி, 209 ரன்னில் மும்பையை கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (2 அரைசதத்துடன் 164 ரன்), கேப்டன் ரஜத் படிதார் (2 அரைசதத்துடன் 161 ரன்), பில் சால்ட், தேவ்தத் படிக்கல், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி தனது முதல் மூன்று ஆட்டங்களில் லக்னோ, ஐதராபாத், சென்னை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.

    நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காக ஒரே அணியான டெல்லியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பாப் டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், முகேஷ் குமாரும் வலுசேர்க்கின்றனர். கேப்டன் அக்ஷர் பட்டேலின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இன்னும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

    தனது வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி அணியும், 4-வது வெற்றியை குறிவைத்து பெங்களூரு அணியும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா அல்லது ஸ்வப்னில் சிங் அல்லது ராசிக் சலாம்.

    டெல்லி: பாப் டுபிளிஸ்சிஸ் அல்லது சமீர் ரிஸ்வி, ஜேக் பிராசர் மெக்குர்க், அபிஷேக் போரல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன், அஷூதோஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.
    • சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்தார்.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சிமொனே பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை7-6 (7-4), 10-7 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஹாங்காங் வீரர் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 18-21, 10-21 என தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே, எச்.எஸ்.பிரனோய் இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×