என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரையன் பென்னட் 139 ரன்கள் எடுத்தார்.
    • முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதில் ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஜாக் கிராலி 124 ரன்களையும் குவித்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 565 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பின் தங்கியதுடன் ஃபாலோ ஆனும் ஆனது. இதனையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    அதிகபட்சமாக பிரையன் பென்னட் சதமடித்து அசத்தியதுடன் 139 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார். அவர் 97 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 106 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை பிரையன் பென்னட் முறியடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர்கள்:-

    பிரையன் பென்னட் - 97 பந்துகள்

    சீன் வில்லியம்ஸ் - 106 பந்துகள்

    நீல் ஜான்சன் - 107 பந்துகள்

    சீன் வில்லியம்ஸ் - 115 பந்துகள்

    பிராண்டன் டெய்லர் - 117 பந்துகள்

    • நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
    • நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் கில்லை தேர்ந்தெடுக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம்.

    இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.

    என்று கூறினார். 

    • அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.
    • ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.

    இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு BWF தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

    32 வயதான ஸ்ரீகாந்த், 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 65-வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது முதல் முறையாக விதியை மீறியதால் ரூ. 12 லட்சம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. ஆர்சிபி கேப்டனுக்கு இது 2-வது முறை என்பதால் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைந்த கட்டணமாக பார்க்கப்படுகிறதோ அதை அபராதமாக வசூக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
    • டெஸ்ட்டில் கருண் நாயரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்தது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை இன்று அறிவித்துள்ளது.

    அந்த வகையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக 2017-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

    டெஸ்ட்டில் 6 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும். இதனை இங்கிலாந்து எதிராக அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி விவரம்:

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    • தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
    • இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயங்கியது.
    • துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடியது.

    அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். 

    இந்திய அணி விவரம்:

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    • பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    VIDEOஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சமகாலத்தில் மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்று ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய நேர்காணலில் கடந்த சில ஆண்டுகளில் உங்களை மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்று ஜாஸ் பட்லரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த பட்லர், "அது ரோகித் ஷர்மாதான். சிறப்பாக விளையாடி இந்திய அணியை நேர்த்தியாக வழி நடத்தினார். நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்" என்று தெரிவித்தார். 

    • 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்பதாக விராட் கோலி தெரிவித்தார்.
    • "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு சிம்பு புகழாரம் சூட்டினார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, "கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்'' என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது

    இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்தார்.

    • டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    • புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 190 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (458 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (435), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் கலக்குகிறார்கள்.

    டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வென்று வீறுநடை போட்ட டெல்லி அடுத்த 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சறுக்கியதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

    டெல்லி அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 504 ரன்) தவிர்த்து மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருசேர சிறப்பாக ஆடாதது பலவீனமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் பாப் டு பிளிஸ்சிஸ் அணியை வழிநடத்துவார்.

    இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம் தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

    தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. அதே சமயம் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    ஜெனீவா:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்,

    ×