என் மலர்
விளையாட்டு
- 23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.
- சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு 18 வீரர்களை அறிவித்தது.
சுப்மன்கில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்சர்மா ஓய்வு பெற்றதால் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. ரிஷப்பண்ட் துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன், கருண் நாயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர் பிராஸ் அகமது, முகமது ஷமிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.
சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கபட்டதை குறித்து தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியதாவது:-
இங்கிலாந்து லயன்ஸ் அணி (இங்கிலாந்து ஏ) இந்தியா வந்த போது சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். செயல்பாடு காரணமாக அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரராக அவர் உள்ளார்.
இவ்வாறு அகர்கர் கூறினார்.
சாய் சுதர்ஷன் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கி லாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் உள்ளூர் போட்டியிலும் சாய் சுதர்ஷ னின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 29 முதல் தர போட்டிகளில் 1,957 ரன் கள் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
- முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
- நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி முந்தைய இரு ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட அந்த அணி வெற்றியுடன் விடைபெற ஆர்வம் காட்டும். ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் யார்? கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
- முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
- 5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்து விட்ட அந்த அணி முந்தைய ஆட்டத்தில் லக்னோவிடம் 33 ரன் வித்தியாத்தில் தோல்வி கண்டது. அந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்றில் உத்வேகத்துடன் களம் இறங்கும் முனைப்புடன் உள்ள குஜராத் அணி டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க தீவிரம் காட்டும்.
5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, லக்னோ, கொல்கத்தாவுக்கு எதிராக) 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி கடைசி இடம் பெற்றது கிடையாது. பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான டோனிக்கு இது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய வெற்றியோடு நிறைவு செய்து கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி போராடும். ஆனால் வலுவான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை கொண்ட குஜராத் அணியின் சவாலை சமாளிப்பது எளிதானது கிடையாது என்பதில் சந்தேகமில்லை.
- ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரீஸ்:
ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.
ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 (7-2) என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:
மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.
உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.
- ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடந்தது.
- ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதிப்போட்டியில் தோற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதன் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோபோலி ஸ்வரேவை 6-2, 6-4 என எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டியில் வென்றார்.
ஜெனீவா:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுபர்ட்
ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ஜோகோவிச் சுதாரித்துக் கொண்டு ஆடினார். அடுத்த இரு செட்களை 7-6 (7-2), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜெனீவா ஓபன் தொடரில் பட்டம் வென்றது 100வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 12 பந்தில் 32 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 206 ரன்கள் குவித்துள்ளது.
- இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆட்டநாயகனாக சோயிப் பஷிர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்களும், டக்கெட் 140 ரன்களும், ஜாக் கிராலி 124 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்டெடுத்தார். சிறப்பாக ஆடி சதமடித்த பிரையன் பென்னட் 139 ரன்களில் அவுட்டானார்.
முடிவில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்துள்ளது. பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முகமது சமி போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
- ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி நிலையில் யார் இந்திய அணியின் புதிய கேப்டன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அஜித் அகார்கர் கூறியதாவது:-
இந்தத் தொடரிலிருந்து சமி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில போட்டிகளில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை.
என்று அஜித் அகார்கர் கூறினார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.






