என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா
    X

    ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

    • ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரீஸ்:

    ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

    ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 (7-2) என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    Next Story
    ×