என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்? அஜித் அகார்கர் விளக்கம்
    X

    முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்? அஜித் அகார்கர் விளக்கம்

    • முகமது சமி போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
    • ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி நிலையில் யார் இந்திய அணியின் புதிய கேப்டன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.

    இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அஜித் அகார்கர் கூறியதாவது:-

    இந்தத் தொடரிலிருந்து சமி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில போட்டிகளில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.

    ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை.

    என்று அஜித் அகார்கர் கூறினார்.

    Next Story
    ×