என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.
மணீஷ் பாண்டே 23 பந்தில் 37 ரன்னும், சுனில் நரைன் 16 பந்தில் 31 ரன்னும் எடுத்தார். ஹர்ஷித் ராணா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
- இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லீ 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் கமிலா ரகிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வரும் புதன்கிழமை நடைபெறும் 2வது சுற்றில் சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ஜில் டெக்மான் உடன் மோதுகிறார்.
- அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது.
- 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
- புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.
இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் கடைசி இடத்தில் சென்னை அணி நிறைவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
- 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
- நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்ட போகிறேன்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே - கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
- ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
- அடுத்த சுற்று வாய்ப்பை இந்த 2 அணிகளும் இழந்துவிட்டன
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட இந்த 2 அணிகளும் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே - கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
- ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் மீண்டும் பெங்களூரு அணியில் இருந்துள்ளார். இது தொடர்பான விடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணி கடைசி இடத்தில நிறைவு செய்தது கிடையாது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி இன்று தீவிரம் காட்டும்.
அதே சமயம் 5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணிகடைசி இடம் பெற்றது கிடையாது. இந்த போட்டியில் பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான கேப்டன் தோனிக்கு இதுவே ஐபிஎல் இல் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.