என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ஓய்வு குறித்து சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன கூறினார்?
- 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
- நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்ட போகிறேன்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.






