என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு
- சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணி கடைசி இடத்தில நிறைவு செய்தது கிடையாது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி இன்று தீவிரம் காட்டும்.
அதே சமயம் 5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணிகடைசி இடம் பெற்றது கிடையாது. இந்த போட்டியில் பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான கேப்டன் தோனிக்கு இதுவே ஐபிஎல் இல் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.






