என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சபலென்கா வெற்றி
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சபலென்கா வெற்றி

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும்.

    இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் கமிலா ரகிமோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வரும் புதன்கிழமை நடைபெறும் 2வது சுற்றில் சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ஜில் டெக்மான் உடன் மோதுகிறார்.

    Next Story
    ×