என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து ஜிம்பாப்வே தொடர்"

    • இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆட்டநாயகனாக சோயிப் பஷிர் தேர்வு செய்யப்பட்டார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்களும், டக்கெட் 140 ரன்களும், ஜாக் கிராலி 124 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்டெடுத்தார். சிறப்பாக ஆடி சதமடித்த பிரையன் பென்னட் 139 ரன்களில் அவுட்டானார்.

    முடிவில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்துள்ளது. பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரையன் பென்னட் 139 ரன்கள் எடுத்தார்.
    • முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதில் ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஜாக் கிராலி 124 ரன்களையும் குவித்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 565 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பின் தங்கியதுடன் ஃபாலோ ஆனும் ஆனது. இதனையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    அதிகபட்சமாக பிரையன் பென்னட் சதமடித்து அசத்தியதுடன் 139 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார். அவர் 97 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 106 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை பிரையன் பென்னட் முறியடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர்கள்:-

    பிரையன் பென்னட் - 97 பந்துகள்

    சீன் வில்லியம்ஸ் - 106 பந்துகள்

    நீல் ஜான்சன் - 107 பந்துகள்

    சீன் வில்லியம்ஸ் - 115 பந்துகள்

    பிராண்டன் டெய்லர் - 117 பந்துகள்

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் சதமடித்தனர். பென் டக்கெட் 140 ரன்னிலும், ஜாக் கிராலி 124 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஒல்லி போப் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 171 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 565 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    ஜிம்பாப்வே அணியின் முசாராபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 139 ரன்னில் அவுட்டானார். கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை விட 300 ரன்கள் பின்தங்கியதால் பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
    • ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.

    2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி

    ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி கடைசியாக 2003-ல் விளையாடியபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுக வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×