search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ollie Pope"

    • இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், 2வது இன்னிங்சில் 420 ரன்னும் எடுத்தது.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

    அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.
    • அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம்.

    மும்பை:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் வரும் 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப், இந்திய ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தொடர் நடைபெறும் போது வெளியிலிருந்து பல குரல்கள் வரலாம். ஆடுகளம் குறித்து பல விவாதங்கள் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.

    எனவே ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் அணியை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது ஆடுகளத்தில் பொருட்கள் கொஞ்சம் வைத்திருப்போம். இதன்மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருக்கும். இதே போல் இந்தியாவும் அவர்களுக்கு ஏற்றார்போர் ஆடுகளத்தை தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    முதல் பந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பினாலும் நாங்கள் ஆடுகளம் குறித்து எந்த புகாரையும் கூற மாட்டோம். அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம். கடந்த 2021-ம் ஆண்டு தொடரில் ரோகித் சர்மாவும், ரிஷப் பண்டும் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடினார்கள்.

    ஒவ்வொரு பேட்ஸ்மேன் தொடக்கத்திலும் கடும் சவால்களை நாம் கொடுத்து நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு புது பேட்ஸ்மேனுக்கும் நாம் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிளான் ஆக இருக்கிறது.

    என்று ஓல்லி போப் கூறினார்.

    • இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    லீட்ஸ்:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது. 

    இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப் விலகியுள்ளார். ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் தோற்ற நிலையில் இவரது விலகல் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் நாதன் லயன் ஏற்கனவே மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
    • இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    பென் டக்கெட் 178 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 182 ரன்கள் விளாசி ஹியூம் பந்தில் போல்டானார். ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஜோ ரூட் 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து மேக்பிரின் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இந்நிலையில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் இரட்டை சதத்தை ஒல்லி போப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் கடந்த 41 வருடத்தில் அதிவேக இரட்டை சதமாக இது பார்க்கப்படுகிறது. இவர் 207 பந்தில் 205 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணிக்கு எதிராக போத்தம் இரட்டை சதம் விளாசினார். இவர் 220 பந்தில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்சர் மூலம் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்புக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

    • இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து

    67 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    ×