search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிக்சர் விளாசி முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்.. 41 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
    X

    சிக்சர் விளாசி முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்.. 41 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

    • ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
    • இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    பென் டக்கெட் 178 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 182 ரன்கள் விளாசி ஹியூம் பந்தில் போல்டானார். ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஜோ ரூட் 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து மேக்பிரின் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இந்நிலையில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் இரட்டை சதத்தை ஒல்லி போப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் கடந்த 41 வருடத்தில் அதிவேக இரட்டை சதமாக இது பார்க்கப்படுகிறது. இவர் 207 பந்தில் 205 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணிக்கு எதிராக போத்தம் இரட்டை சதம் விளாசினார். இவர் 220 பந்தில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்சர் மூலம் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்புக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    Next Story
    ×