search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஜோ ரூட், ஒல்லி போப் அபார சதம் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 539 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    சதமடித்த ஜோ ரூட்

    ஜோ ரூட், ஒல்லி போப் அபார சதம் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 539 ரன்களுக்கு ஆல் அவுட்

    • இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து

    67 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    Next Story
    ×