என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் - கேப்டனாக கில், துணை கேப்டனாக பண்ட் தேர்வு
- பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயங்கியது.
- துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடியது.
அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.






