என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்ததற்கு இதுதான் காரணம்- அஜித் அகார்கர்
- நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
- நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் கில்லை தேர்ந்தெடுக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம்.
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
என்று கூறினார்.






