என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நெதர்லாந்து சார்பில் பேஸ் டி லீட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • கோலின் ஆக்கர்மேன் 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்.

    இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்தத் தொடரின் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனால் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிதானமாக இன்னிங்ஸை தொடங்கியது. இந்த அணியின் துவக்க வீரரான லௌரென் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்க் பொறுப்பாக ஆடி 26 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜான் நிகோல் 38 பந்துகளுக்கு 42 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்தார். போட்டி முடிவில் நமீபியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்துள்ளது.

    நெதர்லாந்து சார்பில் லோகன், பேஸ் டி லீட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆர்யன் தத், ஃபிரெட் கிளாசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது நெதர்லாந்து அணி 157 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் மைக்கல் லீவிட் 15 பந்துகளில் 28 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) எடுத்தார். இவருடன் களமிறங்கிய மேக்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேஸ் டி லீட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கோலின் ஆக்கர்மேன் 28 பந்துகளில் 32 ரன்களை (1 சிக்சர்) அடித்து அவுட் ஆனார். நெதர்லாந்து சார்பில் பேஸ் டி லீட் அதிகபட்சமாக 48 பந்துகளில் 72 ரன்கள் (5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • 10வது போட்டி டெல்லியில் நடைபெற்றது.
    • நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்தத் தொடரின் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனால் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிதானமாக இன்னிங்ஸை தொடங்கியது. இந்த அணியின் துவக்க வீரரான லௌரென் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்க் பொறுப்பாக ஆடி 26 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜான் நிகோல் 38 பந்துகளுக்கு 42 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்தார்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜெர்ஹார்டு மற்றும் ஜெ.ஜெ. ஸ்மித் முறையே 18 மற்றும் 22 ரன்களை எடுத்தனர். போட்டி முடிவில் நமீபியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்துள்ளது. நெதர்லாந்து சார்பில் லோகன், பேஸ் டி லீட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆர்யன் தத், ஃபிரெட் கிளாசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது நெதர்லாந்து அணி 157 ரன்களை இலக்காக கொண்டு ஆடுகிறது.

    • மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
    • நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது

    டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கியது. கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் ஏ அணியில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதின

    டாஸ் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் டவுட் தவறவிட்டார். அதன் விளைவாக 19 ஆவது ஓவரிலேயே 24 ரன்களை பகீம் அஷ்ரப் விளாசினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வென்றது.

    கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்த பகீம் அஷ்ரப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இதுகுறித்து பேசிய மேக்ஸ் டவுட், "என்னை பற்றி வந்த சில கருத்துக்கள் மிகவும் கடுமையானவை, யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்று. நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது" என்று கிண்டலாக தெரிவித்தார். 

    • டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது
    • வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது என்று ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காததற்கு வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது என்றும் 2031 உலக கோப்பைக்கு முன்பாக ICC தொடர் ஒன்றை வங்கதேசத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜோக் குப்தா தெரிவித்தார். 

    • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
    • இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்நிலையில், U19 உலக கோப்பை வென்றதற்காக சச்சினை சந்தித்து ஆயுஷ் மாத்ரே வாழ்த்து பெற்றுள்ளார்

    அப்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் கடைசியாக விளையாடிய தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை அன்புப் பரிசாக வழங்கினார்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.
    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

    கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.

    பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யாகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

    2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன் , ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர்; ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை

    • இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஏற்று முடிவெடுக்கப்பட்டது.
    • கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தது.

    மறுபுறம், புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.

    எனவே பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கிடையே நேற்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஏற்று, கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி இந்தப் போட்டியில் பங்கேற்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் வரும் 15 ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது. 

    • 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
    • கனடா சார்பில் நவ்நீத் தலிவால் அதிகபட்சமாக 49 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். ஹர்ஸ் தாக்கர் 33 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தெர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 32 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன்கள் விளாசினார்.

    டெவால்டு பிரேவிஸ் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.

    மில்லர் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 39 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 19 பந்தில் 34 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 39 பந்தில் 79 ரன்கள் குவித்தது.


    214 என்ற இலக்குடன் கனடா களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து கனடா தோல்வியை தழுவியது. 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது.

    கனடா சார்பில் நவ்நீத் தலிவால் அதிகபட்சமாக 49 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். ஹர்ஸ் தாக்கர் 33 ரன்கள் எடுத்தார்.

    மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிக்டி 4 விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு ஆதாரமாக விளங்கினார். 

    • எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம்.
    • ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

    இதனால் பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-

    நாங்கள் அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தற்போதைய நிலையில் இதுபற்றி மேலும் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஐசிசி-யில் பதிலை பெற்ற பிறகு நாங்கள் முடிவு செய்வோம். ஐசிசி பதில் அளித்தபின், ஆலோசனைக்காக பிரதமர் ஷேபாஸ் ஷெரீபை சந்திப்போம். நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும்.

    எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம். ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம். ஐசிசி- வங்கதேசம் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் கருத்து கூற இயலாது. வங்கதேசத்தின் முடிவில் அர்த்தமுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம்.

    ஐசிசி மிரட்டல்களுக்கு நாங்கள் பயந்துவிடுபவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். எங்களுடைய ராணுவ தளபதி ஆசிம் முனீர் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த தடையையும் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.

    இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    • எங்களுடைய அணிக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் அணியில் இந்தியா- பாகிஸ்தான் என்பதெல்லாம் கிடையாது.

    டி20 உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் அணி விளையாடுகிறது. அந்த அணி நாளை தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் அணியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகிறார்கள். கேப்டனாக முகமது வாசீம் உள்ளார்.

    இவரிடம் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முகமது வாசீம் கூறியதாவது:-

    எங்களுடைய அணிக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் அணியில் இந்தியா- பாகிஸ்தான் என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்காக விளையாடி வருகிறோம்.

    நாங்கள் எங்களுக்குள் ஒரு குடும்பமாக பழகி வருகிறோம். ஒரு குடும்பமாக, நண்பர்களாக வசித்து வருகிறோம். நாங்கள் இணைந்து நேரத்தை செலவிடுகிறோம். இணைந்து சாம்பிடுகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன்- பாகிஸ்தானி என்பதெல்லாம் இல்லை.

    இவ்வாறு முகமது வாசீம் தெரிவித்தார்.

    • முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
    • தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

    • பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் விளையாட பேச்சுவார்த்தை.
    • பாகிஸ்தான் சில நிபந்தனைகள் ஐசிசி முன் வைத்தது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

    வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்தது, தற்போது பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது.

    பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-

    பாகிஸ்தானின் நிபந்தனை 1: வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும்.

    ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.

    பாகிஸ்தானின் நிபந்தனை 2: வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    பாகிஸ்தானின் நிபந்தனை 3: இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.

    ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும்.

    பாகிஸ்தானின் நிபந்தனை 4- இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.

    ஐசிசி பதில்: அதிகார வரம்பு இல்லாததை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்படுகிறது.

    பாகிஸ்தானின் நிபந்தனை 5: இந்த வருடம் இந்தியா வங்கதேசம் சென்று விளையாட இருந்தது. இந்த தொடரை உறுதிப்படுத்தும் வகையில் ஐசிசி ஈடுபட வேண்டும்.

    ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.

    இவ்வாறு பதில் அளித்த ஐசிசி, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.

    ×