என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 190 ரன்கள் குவித்தது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 12-வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. பர்ஹான் 73 ரன்னும், பாபர் அசாம் 46 ரன்னும் எடுத்தனர்.
அமெரிக்காவின் வான் சால்க்விக் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஷயான் ஜஹாங்கீர் 49 ரன் எடுத்தார். ஷுபம் ரஞ்சனே அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை.
- எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்.
வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அரசு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், கடுமையான நிதி அபராதத்திற்கு உள்ளாகும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.
அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் அமினுல் இஸ்லாம், ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-
நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது சுட்டிக்காட்டினோம். வங்கதேச கிரிக்கெட் போர்டு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், ஐசிசி-யால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவுதான்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நலனை கருதவில்லை. எங்களுடைய எங்கள் பணி முற்றிலும் வங்காளதேசத்துடன் தொடர்புடையது. அதனடிப்படையில் அரசு முடிவு எடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, நாங்கள் அதன் பிறகு விளையாடுகிறோம்.
பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அறிவுறுத்தியுள்ளது.
ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும், இந்த உலகளாவிய தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை ஆதரிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
- பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
- பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். மேலும் தொடர் தொடங்கியதில் இருந்தும் சில வீரர்கள் விலகி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், காயம் காரணமாக 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவர் சனிக்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. முன்னதாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட அதே தசைநார் கிழிவு, தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக ஆப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே-வை காயம் காரணமாக இழந்த நிலையில், தற்போது அனுபவமிக்க பிரேஸ்வெல்லின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
- பாபர் அசாம் முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
முன்னதாக தொடர்ந்து தடுமாறி வரும் பாபர் அசாம், முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை, மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் படைத்தார்.
குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள் அடித்த வீரர்கள் விவரம்:-
பாபர் அசாம் - 110.4
மொஹமத் ஹஃபீஷ் - 111.8
குமார் சங்கக்கரா - 112.2
கேன் வில்லியம்சன் - 112.5
- அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது.
- திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பில் சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் மற்றும் மருமகள் சானியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அர்ஜுன் - சானியா திருமணத்திற்கு அழைப்பதில் பெருமை கொள்கிறோம். இளம் தம்பதியினருக்கு வழங்கிய ஆசிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் எனவும் இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது நிச்சயதார்த்தம் 2025, ஆகஸ்ட் 13 அன்று மிகவும் ரகசியமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் தரப்பில் ஃபர்ஹான் 73 ரன்கள் விளாசினார்.
- அமெரிக்கா அணி தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொழும்பு:
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ஃபர்ஹான் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 19 ரன்னிலும் சல்மான் ஆகா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஃபர்ஹான் மற்றும் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் தடுமாறிய பாபர் அசாம் அடுத்த அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபர்ஹான் அரை சதம் விளாசினார். அவர் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து வந்த நவாஸ் 5 ரன்னிலும் ஃபஹீம் அஷ்ரஃப் 1 ரன்னிலும் வெளியேறினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய சதாப் கான் 12 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா அணி தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்த பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது.
- இது எல்லா வீரர்களுக்கும் தெரியும்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா- இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்திய அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் அதிரடி பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளுக்கு பயத்தை கொடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளது என இலங்கை அணி வீரர் பனுகா ராஜபக்ச கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளது. மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவதை விட அது சிறப்பானது. அது எப்படி சாத்தியம் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. இந்த பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது. இது எல்லா வீரர்களுக்கும் தெரியும் என அவர் கூறியுள்ளார்.
- நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- சைஃபர்ட் 89 ரன்களிலும் ஆலன் 84 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை:
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சைஃபர்ட் மற்றும் ஆலன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் யுஏஇ அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சைஃபர்ட் 89 ரன்களிலும் ஆலன் 84 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வென்றது.
- இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12-ம் தேதி எதிர்கொள்கிறது.
10-வது உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட தொடை நரம்பு காயம் தீவிரமடைந்ததால், தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். வனிந்து ஹசரங்கா விலகியது இலங்கை அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு ஆகும். அவருக்குப் பதிலாக துஷன் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12-ம் தேதி எதிர்கொள்கிறது.
- யுஏஇ தரப்பில் முகமது வசீம் 66 ரன்கள் விளாசினார்.
- நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை:
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ஆர்யன்ஸ் ஷர்மா 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து முகமது வசீம் , அலிஷான் சராபு ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாகி விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். முகமது வசீம் 66 ரன்களும் அலிஷான் சராபு 55 ரன்களும் எடுத்தனர்.
அடுத்த வந்த வீரர்கள் முடிந்த அளவு ரன்களை குவித்தனர். இதனால் இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் நாளை மோதவுள்ளனர்.
- பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் நாளை நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி பேட்டர் டிம் டேவிட் தசைநார் காயம் காரணமாக, நாளை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களாக பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் தலா ரூ.15.41 லட்சம்.
- இரட்டையர் பிரிவில் வெற்றியாளர்கள் ரூ.4.98 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள்.
சென்னை:
உலக டேபிள் டென்னிஸ் அமைப்பு சார்பில் ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் கடந்த ஆண்டு சென்னையில் முதல் முறையாக நடைபெற்றது.
2-வது ஸ்டார் கன்டென்டர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. 15-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சித்தலே-மானுஷ் ஷா ஜோடிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 16 வீரர்களில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா மற்றும் சத்தியன் ஞானசேகரன் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் எந்த இந்திய வீரரும் போட்டித் தரவரிசையில் இடம்பெறாத நிலையில் தற்போது 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இது டேபிள் டென்னிசில் இந்தியாவின் முன்னேற்றத்தை காட்டுகிறது.
ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் தலா ரூ.15.41 லட்சம் பரிசுத்தொகையுடன் 600 உலகத் தரவரிசைப் புள்ளிகளையும் பெறுவார்கள். இரட்டையர் பிரிவில் வெற்றியாளர்கள் ரூ.4.98 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு 600 புள்ளிகளும் வழங்கப்படும்.






