என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார்.
    • பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப். இவர் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு காரணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

    அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன தவறு செய்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 16 சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார்.

    • பின் ஆலென் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று 5 ஆயிரம் ரன்களை (175 ஆட்டம்) கடந்தார்.
    • நியூசிலாந்து- அமீரகம் இடையிலான நேற்றைய ஆட்டத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் யுஏஇ- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அரங்கேறிய சாதனைகளை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட்-பின் ஆலென் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் திரட்டியது. இதன் மூலம் 20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்-அலெக்ஸ் ஹாலெஸ் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்ததே ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்சமாக இருந்தது.

    இந்த ஆட்டத்தில் பின் ஆலென் 5 சிக்சரும், டிம் செய்பெர்ட் 3 சிக்சரும் பறக்க விட்டதுடன், சர்வதேச 20 ஓவர் போட்டியில் 100 சிக்சர்களை அடுத்தடுத்து எட்டினர். இருவரும் முறையே இந்த மைல்கல்லை தொட்ட 4-வது. 5-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றனர்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 7-வது முறையாகும். நியூசிலாந்து அணி முதல்முறையாக இத்தகைய வெற்றியை ருசித்தது.

    நியூசிலாந்து அணி 174 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி விரட்டிபிடிக்கப்பட்ட 2-வது அதிகபட்ச இலக்கு இதுவாகும். 2022-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி எட்டியதே சாதனையாக நீடிக்கிறது.

    பின் ஆலென் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று 5 ஆயிரம் ரன்களை (175 ஆட்டம்) கடந்தார். குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளராக திகழ்கிறார். அவர் இந்த ஸ்கோரை அடைவதற்கு 2,854 பந்துகள் தேவைப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவின் அபிஷேக் ஷர்மா 2,898 பந்தில் எட்டியதே சாதனையாக இருந்தது.

    நியூசிலாந்து- அமீரகம் இடையிலான நேற்றைய ஆட்டத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

    • இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார்.
    • இந்த போட்டியில் இந்தியா 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியர் கள் தொடர்ந்து பதக்க வேட்டை நடத்துகிறார் கள். நேற்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைப்பிரிவில் இந்தியாவின் ஆக்ரிதி தாஹியா வெள்ளிப்பதக்கமும் (354.2 புள்ளி), அஞ்சும் சோப்ரா வெண்கலப்பதக்கமும் (340.4 புள்ளி) வென்றனர்.

    கஜகஸ்தான் வீராங்கனை சோபியா ஷூல்ஜென்கோ 358.2 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றார். ஜூனியரில் பெண்களுக்கான 3. நிலை பந்தயத்தில் இந்தியாவின் பிராச்சி கெய்க் வாட் 353.3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை முத்த மிட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார். கஜகஸ்தானின் தோமிரிஸ் அமனோவா 351.4 புள் ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் அணிகள் பிரிவில் பிராச்சி, அனுஷ்கா, ஹாசல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,748 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

    இந்த போட்டியில் இந்தியா இதுவரை 39 தங்கம். 15 வெள்ளி, 12 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • அரையிறுதி போட்டிகள் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளன.
    • இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிந்தன.

    இதையடுத்து, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

    ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா

    பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்

    சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்

    டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்

    முதல் காலிறுதியில் உத்தரகாண்டும், 2வது காலிறுதியில் ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்காலும், 4வது காலிறுதியில் கர்நாடகாவும் வென்றன.

    இந்நிலையில், காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.

    முதல் அரையிறுதியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன. 2வது அரையிறுதியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

    பிப்ரவரி 24-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் சுற்றில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தேர்வாகினார்.

    இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இந்தோனேசியாவின் ஜேனிஸ் டென்னை 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் வாங் ஜின் யுவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது நியூசிலாந்து அணி.
    • ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

    சென்னை:

    சென்னையில் நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய சேசிங் செய்த நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர்களான பின் ஆலன், டிம் செய்பர்ட் ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்து, உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்தியது.

    உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி ஏற்படுத்தியது.

    இந்தப் பட்டியலில், இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி 170* ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் குயிண்டன் டி காக் ஜோடி 168 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கையின்

    குமார் சங்கக்காரா, மகேல ஜெயவர்த்தனே ஜோடி 166 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரரான ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் நம்பர் 4 இடத்தில் உள்ளவரும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டேனில் மெத்வதேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 7-6 (7-4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ரஞ்சி கோப்பை தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன.
    • முதல் காலிறுதியில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணியில் நடந்த முதல் அரையிறுதியில் பெங்கால், ஆந்திரா அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 83 ரன்னும், ஸ்ரீகர் பரத் 47 ரன்னும், ஷேக் ரஷீத் 46 ரன்னும் எடுத்தனர்.

    பெங்கால் சார்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய பெங்கால் அணி 629 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுதீப் குமார் கராமி ஒரு ரன்னில் முச்சதத்தை தவறவிட்டு, 299 ரன்னில் அவுட்டானார். ஷகிர் அபிப் காந்தி 95 ரன்னும், சுமந்தா குப்தா 81 ரன்னும், முகமது ஷமி 53 ரன்னும் எடுத்தனர்.

    ஆந்திரா சார்பில் ஷேக் ரஷீத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    334 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆந்திரா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. நிதிஷ் குமார் ரெட்டி 90 ரன்னும், திரிபுரானா விஜய் 46 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆந்திரா அணி இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    பெங்கால் அணி சார்பில் ஷபாஸ் அகமது 4 விக்கெட்டும், சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சுதீப் குமார் கராமிக்கு வழங்கப்பட்டது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், இத்தாலி வீராங்கனை எலிசபெட்டா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் கத்தார் ஓபன் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான கோகோ காப் வெளியேறினார்.

    • டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 190 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 12-வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. பர்ஹான் 73 ரன்னும், பாபர் அசாம் 46 ரன்னும் எடுத்தனர்.

    அமெரிக்காவின் வான் சால்க்விக் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஷயான் ஜஹாங்கீர் 49 ரன் எடுத்தார். ஷுபம் ரஞ்சனே அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை.
    • எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்.

    வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அரசு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், கடுமையான நிதி அபராதத்திற்கு உள்ளாகும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.

    அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் அமினுல் இஸ்லாம், ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி அளித்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-

    நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது சுட்டிக்காட்டினோம். வங்கதேச கிரிக்கெட் போர்டு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், ஐசிசி-யால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவுதான்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நலனை கருதவில்லை. எங்களுடைய எங்கள் பணி முற்றிலும் வங்காளதேசத்துடன் தொடர்புடையது. அதனடிப்படையில் அரசு முடிவு எடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, நாங்கள் அதன் பிறகு விளையாடுகிறோம்.

    பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அறிவுறுத்தியுள்ளது.

    ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும், இந்த உலகளாவிய தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை ஆதரிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    • பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
    • பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். மேலும் தொடர் தொடங்கியதில் இருந்தும் சில வீரர்கள் விலகி வருகின்றனர்.

    அந்த வகையில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், காயம் காரணமாக 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    அவர் சனிக்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. முன்னதாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட அதே தசைநார் கிழிவு, தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக ஆப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே-வை காயம் காரணமாக இழந்த நிலையில், தற்போது அனுபவமிக்க பிரேஸ்வெல்லின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

    ×