என் மலர்
நீங்கள் தேடியது "Michael Bracewell"
- இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
- இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.
இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்.
ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார்.
ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது.
- நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது.
முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
\இந்நிலையில் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு.
அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்.
எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம். மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்.
என்று பிரேஸ்வெல் கூறினார்.
- நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியில் வழக்கமான வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், பென் சீயர்ஸ் மற்று, ஃபின் ஆலன் ஆகியோருக்கு இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து டி20 அணி:
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி.
- அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
- ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் மைக்கெல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 13 வது ஓவரை வீசிய பிரேஸ்வெல் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 2-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மார்க் அடேர் 4-வது பந்தில் மெக்கார்த்தி 5-வது பந்தில் யங் ஆகியோர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Michael Bracewell can't Do anything Wrong
— ⚡ (@Visharad_KW22) July 20, 2022
Hat-trick in his First Over of T20 Internationals is just amazing and Unbelievable 🥵pic.twitter.com/nIPmvgCmjM
இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரராக ஜேக்கப் ஓரம் 2-வது வீரராக டிம் சவுத்தியும் உள்ளனர்.






