டி20 உலகக் கோப்பை: நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த UAE வீரர்

அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.
டி20 உலகக் கோப்பை: நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த UAE வீரர்
Published on

20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப். இவர் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு காரணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன தவறு செய்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 16 சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com