என் மலர்
நீங்கள் தேடியது "டிம் டேவிட்"
- டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
- ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 4ஆவது பந்திலேயே ஹெட்டை (6) வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிசை 1 ரன்னனில் வெளியெற்றினார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக அர்ஷ்தீப் சிங், பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிட்செல் மார்ஷ் திணறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இவர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். அவர் 23 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் 12 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னைத் தொட்டது.
தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மிட்செல் ஓவன் முதல் பந்திலேயே வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இவரின் முதல் அரைசதம் இதுவாகும்.
19ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. ஷார்ட் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் சேஸிங் செய்தது
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டிம் டுவிட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். அத்துடன் ஆஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.
37 பந்தில் சதம் விளாசிய டிம் டேவிட், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணி வீரர்களில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் விளாசியுள்ளனர்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் காயம் காரணமாக குவாலிபையர் 1 போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இறுதிப்போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது.
- போர் பதற்றத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை பார்த்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் மைதானத்தில் இறங்கி மழையில் ஆனந்த குழியல் போட்டார். மேலும் குழந்தையாக மாறிய அவர் மைதானத்தில் விரிந்திருந்த தார்பாயில் சறுக்கி விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
- ஆர்சிபி அணியில் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்பினர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியேர்ர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 11 போட்டிகளில் விளைாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியையும், 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும், 27ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.
- பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார்.
- இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுக்கு டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்சிபி அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த அரைசதம் அடித்த வீரர்கள் அணி மொத்தம்
டிம் டேவிட் ராயல் (சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs பஞ்சாப் கிங்ஸ் 26 பந்துகளில் 50* - 95/9 பெங்களூரு 2025
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 29 பந்துகளில் 56 * - 106/2 பெங்களூரு 2013
ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 44 பந்துகளில் 50* - 108/9 சென்னை 2019
ரியான் மெக்லாரன் (மும்பை இந்தியன்ஸ்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 43 பந்துகளில் 51* - 112/8 நவி மும்பை 2011
சாம் கரன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) vs மும்பை இந்தியன்ஸ் 47 பந்துகளில் 52 -114/9 ஷார்ஜா 2020
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
- கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரச்சின் டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹேட் - டேவிட் வார்னர் களமிறங்கினர். ஹெட் 24 ரன்னிலும் வார்னர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வேல் 25 ரன்னிலும் இன்ங்கிலிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்ஷ் - டிம் டேவிட் அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் அரை சதம் கடந்தார். இறுதியில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் (27 பந்தில் 84 ரன்), ஸ்டப்ஸ் (25 பந்தில் 48 ரன்), ஷாய் ஹோப் (17 பந்தில் 41 ரன்) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.
பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது. இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.
அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ரிசிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது திலக் வர்மா ரன்அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். அத்துடன் மும்பை அணியின் நம்பிக்கை வீணானது.
கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
- 15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
- கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம் பெற்று உள்ளார். சிங்கப்பூரில் பிறந்த அவர் அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாடிய அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியில் வாய்ப்பு அளித்து உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் டிம் டேவிட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் டிம் டேவிட் இடம்பெற வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்த போது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.






