search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: கடைசி பந்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: கடைசி பந்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
    • கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரச்சின் டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹேட் - டேவிட் வார்னர் களமிறங்கினர். ஹெட் 24 ரன்னிலும் வார்னர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வேல் 25 ரன்னிலும் இன்ங்கிலிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்ஷ் - டிம் டேவிட் அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் அரை சதம் கடந்தார். இறுதியில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×