என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நான்கு வீராங்கனைகளுக்கு A தர ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன
    • முகமது ஷமி இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை

    பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

    கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர். மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஏ பிரிவில் உள்ளனர். முன்னதாக தரவரிசையில் இருந்து 'A+' பிரிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


    • மார்க்கிராம் 32 பந்தில் 59 ரன்கள் விளாசினார்.
    • டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டி20 உலகக் கோப்பையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றும் வரும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தெர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 32 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன்கள் விளாசினார்.

    டெவால்டு பிரேவிஸ் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. மில்லர் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 39 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 19 பந்தில் 34 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 39 பந்தில் 79 ரன்கள் குவித்தது.

    • முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
    • ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் விளையாடின.

    இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன், ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

    அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, பிளெசிங் முசராபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னெட் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே 13.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மருமாணி 11 பந்தில் 21 ரன்களும், பிரெண்டன் டெய்லர் 30 பந்தில் ரன்களும் எடுத்தனர். டெய்லர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    • 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றது.
    • ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ரஞ்சி டிராபி தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஜம்மு- காஷ்மீர் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சுபம் கஜூரியா 60 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் குல்தீப் சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய மத்திய பிரதேசம் 152 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக யாஷ் துபே 58 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    38 ரன்கள் முன்னிலையில் அணி 2-வது இன்னிங்சில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வன்ஷஜ் ஷர்மா 54 ரன்கள் எடுத்தார். இதனால் மத்திய பிரதேசம் அணிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கடினமான இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம் அணி 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சரன்ஷ் ஜெயின் 64 ரன்கள் எடுத்தார். காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    • ஓமன் தரப்பில் அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்கள் எடுத்தார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, பிளெசிங் முசராபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் விளையாடி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணி, ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

    அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, பிளெசிங் முசராபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • லீக் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.
    • இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் தசுன் ஷனகா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

    இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 16 முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை தசுன் ஷனகா பதிவு செய்தார். இதன்மூலம், இதற்கு முன் 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்த ருவாண்டா வீரர் ஜாப்பி பிமென்மானாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

    இருப்பினும் இப்போட்டியில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.

    கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இத்தாலி வீரர் பென் மனென்டி 31 பந்துகளில் 52 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அரை சதம் அடித்த முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 

    • ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இத்தாலி சார்பில் பென் தன் 52 ரன்களை விளாசினர்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.

    ஸ்காட்லாந்து தரப்பில் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே - மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார்.

    கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இத்தாலி அணியின் துவக்க வீரரான ஜஸ்டின் மொசகா டக் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய அந்தோனி (13), ஸ்மட்ஸ் (22) என வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய ஹேரி அதிரடியாக ஆடினார்.

    இவர் 25 பந்துகளில் 37 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) விளாச இவருடன் ஆடிய பென் தன் பங்கிற்கு 31 பந்துகளில் 52 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். எனினும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கேல் லீஸ்க் 4 விக்கெட்டுகளையும், மார்க் வாட் 2 விக்கெட்டுகளையும், பிராட் கரி, பிராட் வீல் மற்றும் ஆலிவர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடியது.
    • 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்களின் 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கர்நாடகாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 120 ரன்னில் சுருண்டது.

    இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 53 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய மும்பை அணி 377 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஆகாஷ் ஆனந்த் 70 ரன்கள் குவித்தார். இதனால் கர்நாடகா வெற்றி பெற 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கடினமான இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியில் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ரவிச்சந்திரன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கர்நாடக அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இத்தாலி- ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகிறது.
    • முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே- மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

    இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் 15 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் 18 பந்தில் 41 ரன்களும் மைக்கேல் லீஸ்க் 5 பந்தில் 22 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 200+ ரன்களை குவித்த அணி என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. பெரிய அணிகள் கூட 200 ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது.
    • முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்களில் வீழ்த்தியிருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்த ஹர்ஷித் ராணா பயிற்சி போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, இப்போது குணமடைவதிலும், நான் விரும்பும் விஷயங்களுக்குத் திரும்புவதிலும் கவனம் செலுத்துகிறேன் என ராணா சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

    • இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நேபாளம் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் தோற்ற பின், 'இப்போட்டியில் இருந்து என்ன பாடம் கற்றீர்கள்?' என்ற கேள்விக்கு நேபாள் வீரர் நந்தன் யாதவ், மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் விளாச வேண்டும் என்பதே நாங்கள் கற்ற பாடம் என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

    ×