மார்க்கிராம் அரைசதம்: மில்லர், ஸ்டப்ஸ் அதிரடி- கனடாவுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

மார்க்கிராம் 32 பந்தில் 59 ரன்கள் விளாசினார்.டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மார்க்கிராம் அரைசதம்: மில்லர், ஸ்டப்ஸ் அதிரடி- கனடாவுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா
Published on

டி20 உலகக் கோப்பையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றும் வரும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தெர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 32 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன்கள் விளாசினார்.

டெவால்டு பிரேவிஸ் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. மில்லர் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 39 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 19 பந்தில் 34 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 39 பந்தில் 79 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com