என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் மற்றும் விருத்திமான் சகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாத அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பும்ரா இல்லாததால் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டு விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே, 3. ரோகித் சர்மா, 4. மயாங்க் அகர்வால், 5. புஜாரா, 6. விஹாரி, 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. சகா, 10. இசாந்த் சர்மா, 11. முகமது சமி.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்துக்கு பதிலாக விர்த்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.

    ரிஷப் பந்த்


    இந்நிலையில் ரி‌ஷப்பந்த் பேட்டிங் மற்றும் கீப்பிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விர்த்திமான் சஹா விளையாட உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது. இதனால் தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதிய ஜோகன்ஸ் பார்க் டெஸ்டில் இந்தியா 63 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மோதின. இதில் இந்தியா 337 ரன்னில் வெற்றி பெற்றது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் திகழும்.

    வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தொடக்க வீரராக ஆடிய லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இதனால் நாளைய டெஸ்டில் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்க போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் தொடக்க வரிசையில் விளையாடும் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் பயிற்சி ஆட்டத்தில் அவர் தொடக்க வீரராக ஆடி ‘டக்’ அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் புதுமுக வீரான சுப்மன் ஹில்லுக்கு தொடக்க வரிசை வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி வரும் விகாரியும் தொடக்க வரிசையில் விளையாடக்கூடியவர். அவர் தொடக்க வீரராக ஆடினால் ரோகித் சர்மாவுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    ரோகித் சர்மா அல்லது சுப்மன்ஹில் தொடக்க வரிசையில் இடம் பெற்றால் விகாரி மிடில் ஆர்டரில் தொடர்ந்து ஆடுவார்.

    விக்கெட் கீப்பிங்கில் ரி‌ஷப்பந்துக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இதனால் அவர் நீக்கப்பட்டால் விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. கேப்டன் விராட்கோலி, புஜாரா, ரகானே, விகாரி ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் வேகப்பந்து வீரர் இல்லாதது பாதிப்பே. ஆனால் இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். பும்ராவுக்கு பதிலாக உமேஷ்யாதவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரர்களில் முகமது ‌ஷமியும், இஷாந்த் சர்மாவும் இடம்பெறுவார்கள். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவார். ஜடேஜாவுடன் இணைந்து அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்ளும் வேட்கையில் உள்ளது.

    டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் ஆதிக்கத்தை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும். ஹசிம் அம்லா, ஸ்டெய்ன் ஓய்வு அந்த அணிக்கு பாதிப்பே.

    கேப்டன் டுபெலிசிஸ், எல்கர், மர்கிராம், குயின்டன் டிகாக், பவுமா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பிலாண்டர், ரபடா, கேசவ் மகராஜ் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), அகர்வால், சுப்மன் ஹில், புஜாரா, ரகானே, விகாரி, ரோகித்சர்மா, ஜடேஜா, ரி‌ஷப்பந்த், விர்த்திமான் சஹா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது ‌ஷமி.

    தென்ஆப்பிரிக்கா: டு பெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மர்கிராம், பவுமா, குயின்டன் டிகாக், ரபடா, பிலாண்டர், கேசவ் மகராஜ், டி புருயின், கிளாசன், நிகிடி, செனுரான் முத்துசாமி, ஆன்ரிச் நோர்ட்ஜே, டானே பியட், சுபையர் ஹம்சா.
    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன் என்று தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் தெரிவித்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இதனை அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 29 வயது கேஷவ் மகராஜ் விசாகப்பட்டினத்தில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வித்தியாசமான முறையில் பந்து வீசி திணறடிக்கக்கூடியவர். ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி எதிரணியினருக்கு நெருக்கடி கொடுப்பவர். நிலையாக பந்து வீசுவதன் மூலம் தான் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியும். அஸ்வின், ஜடேஜா செயல்படுவது போல் நானும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒருமுனையில் இருந்து நிலையாக பந்து வீச வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இந்தியாவில் நான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி தொடர் இதுவாகும். இந்திய துணை கண்டத்தில் உள்ள ஆடுகளங்களில் பந்து நன்கு சுழலும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தான் அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணில் பந்து வீசுவது என்பது சிறந்த அணிக்கு எதிராக உங்கள் பந்து வீச்சை சோதிப்பதாகும். இந்த போட்டி தொடர் எனது பந்து வீச்சு எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமையும் என்று நினைக்கிறேன்.

    இந்த போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சு போல் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும். எல்லா அணிகளும் உலகின் எல்லா இடங்களிலும் தங்களிடம் இருந்தால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சை பயன்படுத்தவே விரும்பும். இந்திய அணியில் முகமது ஷமி உள்ளிட்ட வலுவான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சு எடுபட்டால் அந்த மாதிரி பந்து வீசும் திறன் படைத்த வீரர்கள் எங்கள் அணியிலும் உள்ளனர். ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதேநேரத்தில் இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பக்கூடிய பவுலர்கள் போதிய அளவில் உள்ளனர். உமேஷ் யாதவ் மற்றொரு உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்.

    எங்களது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது அவசியமானதாகும். இந்திய சூழ்நிலையை எப்படி சமாளித்து நின்று ஆடுவது என்பது குறித்து கவனம் செலுத்தி பயிற்சி எடுத்து இருக்கிறோம். எங்கள் அணியில் புதிய வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த தோல்வியை பற்றி நினைத்து பார்க்காமல் இந்திய அணிக்கு சவால் அளிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
    முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா லண்டன் செல்ல உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா விலகியதால், அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பும்ராவின் காயம் குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கண்காணிப்பில் அவர் இருப்பார், பிசிசிஐ மருத்துவ குழு அவரது காயத்தை கண்காணிக்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பும்ரா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளார். அவருடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்கிறார். லண்டனில் உள்ள 3 சிறப்பு நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று புகழாரம் சூட்டினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமித்தமாக டோனி என்னை சந்தித்தார். அது மகிழ்ச்சியை தந்தது. நான் அவரிடம், “பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், உங்கள் அதீத திறமையால் மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்றேன்.

    மேலும் அவர், ஜார்கண்ட் மாநிலத்தின் பிரபலமானவர்களின் சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.

    1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தந்த ஆக்கி அணியின் கேப்டன் ஜெயபால் சிங் முண்டா, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோரின் சாதனையையும் எடுத்துரைத்தார்.

    கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

    பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவரில் 73 ரன்கள் சேர்த்தது. இமாம் உல் ஹக் 31 ரன்னிலும், பகர் ஜமான் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த துணைக் கேப்டன் பாபர் அசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அவர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.

    சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்

    ஹரிஸ் சோஹைல் 48 பந்தில் 40 ரன்களும், இப்திகார் அகமது 20 பந்தில் 32 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா மற்றும் சமர விக்ரமா களம் இறங்கினர்.  இருவரும் இணைந்து நிதானமாக ரன்களை குவிக்க தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 3.6வது ஓவரில் சமர விக்ரமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் குணதிலகா (14), அவிஷ்கா பெர்னாண்டோ (0), திரிமானே (0), பெர்னாண்டோ  (1) தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.  

    இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜெயசூர்யா,   ‌ஷனகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இருவரும் இணைந்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 40.5வது ஓவரில் ஜெயசூர்யா 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உஷ்மான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.  இதனை தொடர்ந்து  ‌ஷனகா (68) ரன்களில் ஆட்டம் இழந்தார்.  இதனையிடைய பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்து வீச்சில் நிலைத்து நின்று விளையாட முடியாத நிலையில் இசுரு உதனா (1), லகிரு குமாரா (1), ஹசரங்கா (30) என தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் இலங்கை அணிவீரர் நுவன் பிரதீப் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பாகிஸ்தான் அணி தரப்பில் உஷ்மான் 5 விக்கெட்களையும், கான் 2 விக்கெட்களையும், அமிர், வாசிம், ரியாஷ் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர். 
    விஜய் ஹசாரே டிராபி தொடரில் பெங்கால், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் இன்று மூன்று போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் ஜம்மு&காஷ்மீர் - பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு&காஷ்மீர் பெங்கால் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேலின் அபார பந்து வீச்சால் 169 ரன்னில் சுருண்டது. பொரேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கோஸ்வாமி (86), ஈஸ்வரன் (51) சிறப்பாக விளையாட 28 ஓவரிலேயே வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் பீகார் - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பீகார் 137 ரன்னில் சுருண்டது. பின்னர் மத்திய பிரதேசம் 27.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் பர்கவ் மேராய் (125) சதத்தால் 305 ரன்கள் குவித்தது. பின்னர் 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திரிபுரா களம் இறங்கியது. மிலிந்த் குமார் (103) சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க திரிபுரா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களே அடித்தது. இதனால் குஜராத் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கராச்சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் சதம் அடிக்க பாகிஸ்தான் 305 ரன்கள் குவித்துள்ளது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவரில் 73 ரன்கள் சேர்த்தது. இமாம் உல் ஹக் 31 ரன்னிலும், பகர் ஜமான் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பாபர் அசாம்

    அடுத்து வந்த துணைக் கேப்டன் பாபர் அசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அவர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.

    கராச்சி மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

    ஹரிஸ் சோஹைல் 48 பந்தில் 40 ரன்களும், இப்திகார் அகமது 20 பந்தில் 32 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான 2-வது லீக் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட லீக் தொடரில் விளையாடி வருகிறது.

    2-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் பிரிட்டன் முதல் கோல் அடித்தது. அதற்கு பதிலடியாக 32-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது.

    அதன்பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி லீக் நாளை நடக்கிறது.
    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சிங்கப்பூர்.
    சிங்கப்பூரில் ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூர் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆட்டம் 18 ஓவர்களாக குறைப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் டேவிட் (41), மான்ப்ரீத் சிங் (41), ரோகன் (39) ஆட்டத்தால் 18 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிங்கப்பூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சகப்வா (48), 3-வது வீரர் வில்லியம்ஸ் (66), அடுத்து வந்த முட்டோம்போட்ஜி (32) குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடினர்.

    அதன்பின் வந்தவர்கள் சொதப்பியதால் ஜிம்பாப்வே அணியால் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177  ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சிங்கப்பூர் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    மேலும், ஐசிசியின் முழு உறுப்பினர் நாடான ஜிம்பாப்வேயை, இணை உறுப்பினர் நாடான சிங்கப்பூர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
    உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவை ஏன் தேர்வு செய்யவில்லை என ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
    உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்திய அணி 4-வது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்திற்கு சாத்தியமான நபர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடின பயிற்சி மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுடைய நேரம் வரும்’’ என பதிவிட்டுள்ளார்.

    நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 31 பந்தில் 81 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    78 லிஸ்ட் ‘ஏ’ போட்டிகளில் 2081 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.1 ஆகும், 42 முதல்தர போட்டிகளில் 12 சதங்களுடன் 4818 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 43 ஆகும்.
    ×