என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவை ஏன் தேர்வு செய்யவில்லை என ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
    உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்திய அணி 4-வது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்திற்கு சாத்தியமான நபர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடின பயிற்சி மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுடைய நேரம் வரும்’’ என பதிவிட்டுள்ளார்.

    நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 31 பந்தில் 81 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    78 லிஸ்ட் ‘ஏ’ போட்டிகளில் 2081 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.1 ஆகும், 42 முதல்தர போட்டிகளில் 12 சதங்களுடன் 4818 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 43 ஆகும்.
    இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வந்து விளையாட சம்மதம் தெரிவிக்குமா? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நேரம் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    ஆசிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்துகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தானில் நடத்த விரும்புகிறது.

    கடந்த முறை நடைபெற்ற போட்டி இந்திய மண்ணில் நடைபெற இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் தொடரில் இந்தியா பங்கேற்குமா? இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பொதுவான இடத்தில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா வருகையை உறுதிப்படுத்த அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நேரம் இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்குமா? என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வரை நேரம் இருக்கிறது.

    பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால், அது இந்தியாவின் ஈடுபாட்டில் உள்ள குறைபாடே காரணமாகும். இதனால் ஜூன் மாதத்திற்குள் ஆசிய கோப்பையை நடத்த நாங்கள் தயாராக வேண்டும்.

    போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்படுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு எடுக்க முடியும். இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    கிரிக்கெட் போர்டு அளவில் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், அவர்களுக்கு ஏராளமான வகையில் அரசு தலையீடு உள்ளது. இந்தியாவுடன் இரு நாட்டு தொடருக்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய முடியாது.

    இந்தியா விரும்பினால் எங்களுடன் பேச வேண்டும். அத்துடன் உறுதியான உறுதிபாட்டை கொடுக்க வேண்டும். பொதுவான இடத்தில் விளையாட எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’’ என்றார்.
    பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    சென்னை:

    பெல்ஜியம் நாட்டில் உள்ள கெண்ட் நகரில் டர்னாய் சேட்லைட் வாள்வீச்சு போட்டி (சர்வதேச அளவிலான பந்தயம்) நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    தனிநபர் சேபர் இறுதிப்போட்டியில் அவர் அஜர் பெய்ஜான் நாட்டைச் சேர்நத அன்னா பாஸ்டாவுடன் 10-15 என்ற கணக்கில் தோற்று 2-வது இடத்தை பிடித்தார். தற்போது பவானிதேவி உலக தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ளார்.

    பவானிதேவி கூறும் போது, “ஒலிம்பிக்குக்கு தகுதி பெற இந்த போட்டி ஊக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல போட்டியிலும் கலந்து கொள்வேன்” என்றார்.
    ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சுமித் நகால் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
    அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது.  இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர்.  இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது.

    உலக தரவரிசையில் 161-வது இடத்தில் இருந்து நகால் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.  இதனால், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை நகால் பெற்றுள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசையில் 26 இடங்கள் முன்னேறி 135-வது இடத்தை பிடித்துள்ளார்.
    உலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி அன்பிரேசர் பிரைஸ் 4-வது முறையாக உலக பட்டத்தை வென்றுள்ளார்.
    தோகா:

    17-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோல்மென் தங்கப்பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.76 வினாடியில் கடந்து உலகின் அதிவேக வீரராக திகழ்ந்தார்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.50 மணிக்கு நடந்தது.

    இதில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி- அன்பிரேசர் பிரைஸ் தங்கம் வென்று முத்திரை பதித்தார். 33 வயதான அவர் பந்தய தூரத்தை 10.71 வினாடியில் கடந்து அதிவேக வீராங்கனையாக திகழ்ந்தார்.

    பிரேசர் பிரைஸ் 4-வது முறையாக 100 மீட்டர் ஓட்டத்தில் உலக பட்டத்தை வென்றார். 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். வெற்றி பெற்றதும் அவர் மைதானத்தில் தனது 2 வயது மகன் ஜியானை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

    தனது 2 வயது மகனுடன் பிரைஸ்


    ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த டினா ஆ‌ஷர் சுமித் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 10.83 வினாடியில் கடந்தார்.

    ஐவேரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த மேரி ஜேர் டாலாவ் 10.90 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

    400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 7-வது இடத்தை பிடித்தது. முகமது அனாஸ், விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ, நோவா ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.77 வினாடியில் கடந்து 7-வது இடத்தை பிடித்தது.

    இந்த சீசனில் இந்தியாவின் சிறந்த நிலையாகும். இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தது.

    அமெரிக்க அணி 3 நிமிடம் 9.34 வினாடியில் கடந்து உலக சாதனையோடு தங்கம் வென்றது. ஜமைக்கா 3 நிமிடம் 11.78 வினாடியில் கடந்து வெள்ளியும், பக்ரைன் 3 நிமிடம் 11.82 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர் 17.92 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் சீன வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.

    3-வது நாள் போட்டி முடிவில் அமெரிக்கா 4 தங்கம், 4 வெள்ளி ஆக மொத்தம் 8 பதக்கம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சீனா 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், ஜமைக்கா 2 தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
    ரஷியாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார்.
    சோச்சி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 309.745 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகத்தில் சென்றனர்.

    முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 33 நிமிடம் 38.992 வினாடிகளில் முதலாவது வந்து அதற்குரிய 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும். இவரை விட 3.829 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரி அணி) 3-வதாக வந்தார். அவருக்கு 15 புள்ளிகள் கிடைத்தது. 5 வீரர்கள் இலக்கை நிறைவு செய்யாமல் விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியேறினர். இதில் 4 முறை சாம்பியனான செபாஸ்டியன் வெட்டலும் (ஜெர்மனி) அடங்குவார்.

    இதுவரை நடந்துள்ள 16 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் (322 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். போட்டாஸ் 249 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், சார்லஸ் லெக்லெர்க் 215 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    17-வது சுற்று போட்டி வருகிற 13-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது.
    என்னுடைய குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்கிறார் ஸ்ரீசந்த்.
    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்துக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் முறையிட்டார். கோர்ட் அவரை விடுவித்தது.

    என்றாலும், அவரால் இன்றும் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. 36 வயதாகும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசந்த், இன்னும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து தவறு செய்யவில்லை என்று ஸ்ரீசந்த் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனது குழந்தை, கடந்த ஐந்து வருடமாக நோயால் உயிருக்கு போராடிக் கொண்டிக்கும் எனது தந்தை, ஒரு கால் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் எனது  தாய்  ஆகியவர் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் மேட்ச் பிக்சிங் ஈடுபடவில்லை. அவர்கள் என்னுடைய போட்டியை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையை இழக்கவில்லை. 100 கோடி ரூபாய் தந்தால் கூட மேட்ச் பிக்சிங் தவறை செய்யமாட்டேன்.

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் சிலர், சிரித்த முகத்துடன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். போலீசார் காட்டிய சாட்சியின்படி நான் பெயர்களை வெளியிட முடியும். ஆனால், அதை நான் செய்யமாட்டேன். மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப எனக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. சில  வீரர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள். நம் நாட்டு வீரர்கள் மட்டுமல்ல. உலகளவில் விளையாடுகிறார்கள்.

    நான் இந்த பிரச்சனையை கடந்து வந்த அளவிற்கு அவர்கள் வலிமையானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்தான். ஆனால், அவர்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ என்றார்.
    சிங்கப்பூர் அணிக்கெதிராக சேஸிங்கில் சதம் அடித்து நேபாள கேப்டன் பராஸ் கட்கா சாதனைப் படைத்துள்ளார்.
    நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் - சிங்கப்பூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் பராஸ் கட்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 52 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவரது சதத்தால் நேபாளம் அணி 16 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பராஸ் கட்கா சதம் அடித்ததன் மூலம் கேப்டனாக சேஸிங்கில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலர் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 90 ரன்களும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 88 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் அடித்துள்ளனர்.
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கங்குலியை போல் முடிவுகளை தைரியமாக எடுக்கிறார் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அளித்த ஒரு பேட்டியில், ‘‘தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு அசுர பலம் கொண்டு இருப்பதை உலகுக்கு நிரூபித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டு மண்ணில் நமது அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சவுரவ் கங்குலி ஏற்படுத்தினார். களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு நம்மை கவர்ந்து அதனை பின்பற்ற வழிவகுத்தது. விராட் கோலி நிறைய விஷயங்களில் முன்னாள் கேப்டன் கங்குலியை போல் செயல்படுகிறார். ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய அவர் முடிவுகளை தைரியமாக எடுத்து வருகிறார்.

    விராட் கோலி ஜாகீர்கான்

    நெருக்கடியான நிலையிலும் கூட விராட் கோலி அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார். அத்துடன் அவருடைய பேட்டிங் திறமை அணியை வழி நடத்துவதில் பிரதிபலிக்கிறது. அவர் ஒருநாளில் நமக்கு உலகக்கோப்பையை வென்று தருவதை பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கிரிக்கெட் ஆலோசகர் கமிட்டியில் இடம் பிடித்ததால், அவர் மீது இரட்டை ஆதாய புகார் எழுந்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் அன்ஷூமன் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி சமீபத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை தேர்வு செய்தது.

    இந்த நிலையில் அவர்கள் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே. ஜெயினிடம் புகார் அளித்துள்ளார்.

    கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் இருக்கக்கூடாது. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் உள்ள கபில்தேவ், வர்ணனையாளர், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்று பல பொறுப்புகளில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல் கெய்க்வாட், ரங்கசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை குறித்து வருகிற 10-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மூன்று பேருக்கும் நெறிமுறை அதிகாரி டி.கே. ஜெயின் நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.
    சிட்னியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை சேர்ந்த வீராங்கனைகள் சதம் அடித்தனர்.
    ஆஸ்திரேலியா - இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அலிசா ஹீலி, பெத்  மூனே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹீலி 21 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஆனால், பெத் மூனே சிறப்பாக விளையாடி 61 பந்தில் 20 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார். கார்ட்னெர் 27 பந்தில் 49 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

    218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கையின் சமரி அட்டப்பட்டு, யசோதா மெண்டிஸ் ஆகியார் தொடங்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். அட்டப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த யசோதா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் எதிரணி வீராங்கனைகள் சதம் அடித்து சாதனையை பதிவு செய்தனர்.

    அட்டப்பட்டு

    என்றாலும் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது.

    ஆஸ்திரேலியா வீராங்கனை மூனே-க்கு இது 2-வது சதமாகும். இதன்மூலம் டி20 போட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் மெக் லேனிங் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். மேலும், சிக்சர்கள் ஏதும் இல்லாமல் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    பீகார் அணிக்கெதிராக விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாச, தமிழ்நாடு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    விஜய் ஹசாரே டிராபியில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பீகார் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணியின் கேப்டன் பாபுல் குமார் (110) சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பீகார் அணியால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களே சேர்க்க முடிந்தது.

    பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. ஜெகதீசன், அபிநவ் முகுசந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஜெகதீசன் 24 ரன்களிலும், அபிநவ் முகுந்த் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரி நிஷாந்த் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    4-வது விக்கெட்டுக்கு பாபா அபரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபா அபரஜித் 52 ரன்களும், விஜய் சங்கர் 91 ரன்களும் ஆட்டமிழக்காமல் ரன் சேர்க்க தமிழ்நாடு அணி  46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணியையும் வீழ்த்தியிருந்தது.
    ×