என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கிரிக்கெட் ஆலோசகர் கமிட்டியில் இடம் பிடித்ததால், அவர் மீது இரட்டை ஆதாய புகார் எழுந்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் அன்ஷூமன் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி சமீபத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை தேர்வு செய்தது.

    இந்த நிலையில் அவர்கள் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே. ஜெயினிடம் புகார் அளித்துள்ளார்.

    கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் இருக்கக்கூடாது. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் உள்ள கபில்தேவ், வர்ணனையாளர், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்று பல பொறுப்புகளில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல் கெய்க்வாட், ரங்கசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை குறித்து வருகிற 10-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மூன்று பேருக்கும் நெறிமுறை அதிகாரி டி.கே. ஜெயின் நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.
    சிட்னியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை சேர்ந்த வீராங்கனைகள் சதம் அடித்தனர்.
    ஆஸ்திரேலியா - இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அலிசா ஹீலி, பெத்  மூனே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹீலி 21 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஆனால், பெத் மூனே சிறப்பாக விளையாடி 61 பந்தில் 20 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார். கார்ட்னெர் 27 பந்தில் 49 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

    218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கையின் சமரி அட்டப்பட்டு, யசோதா மெண்டிஸ் ஆகியார் தொடங்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். அட்டப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த யசோதா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் எதிரணி வீராங்கனைகள் சதம் அடித்து சாதனையை பதிவு செய்தனர்.

    அட்டப்பட்டு

    என்றாலும் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது.

    ஆஸ்திரேலியா வீராங்கனை மூனே-க்கு இது 2-வது சதமாகும். இதன்மூலம் டி20 போட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் மெக் லேனிங் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். மேலும், சிக்சர்கள் ஏதும் இல்லாமல் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    பீகார் அணிக்கெதிராக விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாச, தமிழ்நாடு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    விஜய் ஹசாரே டிராபியில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பீகார் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணியின் கேப்டன் பாபுல் குமார் (110) சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பீகார் அணியால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களே சேர்க்க முடிந்தது.

    பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களம் இறங்கியது. ஜெகதீசன், அபிநவ் முகுசந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஜெகதீசன் 24 ரன்களிலும், அபிநவ் முகுந்த் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரி நிஷாந்த் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    4-வது விக்கெட்டுக்கு பாபா அபரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபா அபரஜித் 52 ரன்களும், விஜய் சங்கர் 91 ரன்களும் ஆட்டமிழக்காமல் ரன் சேர்க்க தமிழ்நாடு அணி  46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணியையும் வீழ்த்தியிருந்தது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது.
    இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா - இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த 26-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது.

    முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது, 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. அந்த அணி மார்கிராம் (100), பவுமா (87), பிலாண்டர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஈஸ்வரன் 13 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 39 ரன்னிலும் வெளியேறினர். பன்சால் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் பரத் 71 ரன்களும் சேர்த்தனர். இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 64 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என்று இந்திய அணி தெரிவித்த நிலையில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்து டக்அவுட் ஆனது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்துக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு மாற்றாக ரி‌ஷப் பண்ட் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் 3 வகையான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

    இதற்கிடையே கடந்த சில போட்டிகளில் ரி‌ஷப் பந்த் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவர் ரன்களை குவிக்க திணறுகிறார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் அவரது செயல்பாடு மோசமாக இருக்கிறது.

    இதனால் ரி‌ஷப் பந்த் விமர்சனத்துக்கு உள்ளானார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ரி‌ஷப் பந்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    3 வகையான போட்டியிலும் அவரே விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    ரி‌ஷப் பந்த் ஆட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் விளையாட விளையாடதான் கற்றுக்கொள்வார். இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு கேப்டனின் ஆதரவு மிகவும் அவசியம்.

    அந்த வகையில் ரி‌ஷப் பந்துக்கு அதிக ஆதரவு தேவைப்படுகிறது. அவர் அணியில் நுழையும்போது மிகவும் சிறப்பான நிலையில் இருந்தார். என்னை பொறுத்த வரையில் இந்திய அணியின் 3 வகையான போட்டிகளுக்கும் ரி‌ஷப் பந்த்தான் பொருத்தமான விக்கெட் கீப்பராக இருப்பார். அவரே சரியான தீர்வாக திகழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தோகாவில் நடைபெற்று உலக தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோல்மேன் 9.76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்.
    17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்று நள்ளிரவில் நடந்தது. உலகம் முழுவதும் உள்ள தடகள ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

    ஏனென்றால் இதில் வெற்றி பெறுபவர் உலகின் அதிவேக வீரராக திகழ்வார். 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த இளம் வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கம் வென்றார். 23 வயதான அவர் பந்தய தூரத்தை 9.76 வினாடியில் கடந்தார். இதன் மூலம் உலகின் அதிவேக வீரர் என்ற பட்டத்தை அவர் வென்றார்.

    தங்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டின் காட்லின் 2-வது இடத்தையே பிடித்தார். அவர் 9.89 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கனடாவை சேர்ந்த ஆந்த்ரே டி கிராசி 9.90 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த ஹிபான் ஹசன் 30 நிமிடம் 17.62 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். எத்தியோப்பியாவுக்கு வெள்ளியும், கென்யாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.

    பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. டி‌ஷனா பிளரஸ் 77.54 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்தார். போலந்துக்கு வெள்ளியும், சீனாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.

    கிறிஸ்டியன் கோல்மேன்

    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஜமைக்கா வீரர் டஜாஸ் கெய்ல் 8.69 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்கா, கியூபாவுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் ஜப்பானை சேர்ந்த யசுகே சுசுகி 4 மணி 4.20 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் சீனாவை சேர்ந்த லியாங் 4 மணி 23.26 நிமிடத்தில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.
    புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய உபி யோத்தா அணி, பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    சண்டிகர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோத்தா அணிகள் மோதின.

    தொடக்கத்தில் இருந்தே யுபி யோத்தா அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 15- 11 என்ற புள்ளிக் கணக்கில் உபி யோத்தா முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் அரியானா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தாலும் அவர்களால் உபி யோத்தா அணியினருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், உபி யோத்தா அணியினர் 37- 30 என்ற புள்ளிக் கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி தோற்றது.

    18-வது ஆட்டத்தில் ஆடிய உபி யோத்தா அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 18-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 50-21 என்ற கணக்கில் சுருட்டியது குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி.
    கொரியா ஓபன் பேட்மிண்டனில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டோவிடம் இந்திய வீரர் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.
    கொரியாவில் உள்ள இன்செயோனில் கொரியா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் பாருபல்லி, 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை எதிர்கொண்டார்.

    காஷ்யப் முதல் செட்டை 13-21 என இழந்தார். இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீரரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, 15 -21 என்ற கணக்கில் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.
    இன்றியமையாத தருணங்களில் பல முக்கிய முடிவுகளை எடுத்தவர் டோனி. அவரது ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் மிகப்பெரிய விவாதமாக இருப்பது டோனி எப்போது  ஓய்வு பெறுவார் என்பது தான். அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டங்களில் டோனி இடம்பெறவில்லை. சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டங்களிலும் டோனி இடம்பெறவில்லை. 

    ஓய்வு முடிவு குறித்து இதுவரை எங்களிடம் டோனி எதுவும் கூறவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருமுறை தெரிவித்தார். நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள் என டோனியே ஒரு முறை வெளிப்படையாக கூறியிருந்தார். 

    ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக ராணுவ பணிகளில் ஈடுபட்டார். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் அணியில்  சேர்ந்து டோனி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.

    இந்நிலையில், டோனியின் ஓய்வைப் பற்றி அவரே முடிவு எடுப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் தெரிவித்துள்ளார்.

    "டோனி நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார், அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். இது அவருடைய முடிவாக இருக்க வேண்டும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணிக்காக இன்றியமையாத தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். நேரம் வரும்போது அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன். அணியின் ஒவ்வொரு வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் டோனியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை" என தவான் கூறினார்.
    இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து இருந்தால் இன்னொரு உலக கோப்பை போட்டியில் விளையாடி இருப்பேன் என்று யுவராஜ் சிங் ஆதங்கம் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று களம் திரும்பிய யுவராஜ் சிங் 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படாததால் கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த நிலையில் யுவராஜ் சிங் தனியார் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு இன்னொரு உலக கோப்பை போட்டியில் என்னால் விளையாடி இருக்க முடியும். இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தவர்களோ? என்னை சுற்றி இருந்தவர்களோ? எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து இருந்தால் நான் மேலும் ஒரு உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கலாம். நான் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் எனது சொந்த முயற்சியில் நடந்தவையாகும். எனக்கென்று ஒருபோதும் யாரும் அரணாக இருந்தது கிடையாது.

    2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2 ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றேன். இலங்கை தொடருக்கு முன்பு காயம் ஏற்பட்டதால் அதில் இருந்து மீண்டு வர தயாராகி கொண்டு இருந்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்படுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    என்னால் ‘யோ-யோ’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என நினைத்தார்கள். ஆனால் நான் 36 வயதில் யோ-யோ தகுதி தேர்வுக்கு தயாராகி அதில் தேர்ச்சியும் பெற்றேன். பிறகு என்னை உள்ளூர் போட்டியில் விளையாடும் படி சொன்னார்கள். அதன் பிறகு என்னை எளிதாக நிராகரித்து விட்டார்கள். 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஒரு வீரரை மரியாதை நிமித்தமாக அழைத்து சூழ்நிலையை விளக்கி கூறாமல் அணியில் இருந்து நீக்கியதை துரதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

    முன்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி மட்டுமே இருந்தது. அதற்கு ஒருவரே கேப்டன் பொறுப்பை வகித்தது பொருத்தமானதாக அமைந்தது. தற்போது 20 ஓவர் போட்டி உள்பட மூன்று வடிவிலான போட்டிகள் நடைபெறுகிறது. எல்லா வகையிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதை விராட்கோலி அதிக சுமையாக கருதினால் 20 ஓவர் போட்டிக்கு வேறு ஒருவரை கேப்டனாக கொண்டு வர முயற்சி செய்யலாம். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் ரோகித் சர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன். இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும்.

    பேட்டிங்கில் 4-வது வரிசையில் களம் இறங்கக்கூடிய அளவுக்கு விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு போதிய அனுபவம் இல்லை. தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர். அவரை வெளியில் வைத்து விட்டு உலக கோப்பை அரைஇறுதியில் திடீரென களம் இறக்கினார்கள். ஒரு வீரரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றால் அணியில் வீரரின் இடத்துக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். அணியில் இடம் பெறுவதில் நிச்சயமற்ற தன்மை இருந்தால் ஒரு வீரரால் ஒருபோதும் சிறப்பாக செயல்பட முடியாது. அது தான் இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
    புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 17- 11 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணியினர் 35- 33 என்ற புள்ளிக் கணக்கில் திரில் வெற்றி தோற்றது.

    19-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 18-வது ஆட்டத்தில் ஆடிய யு மும்பா அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 51-31 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்திய தெலுகு டைட்டன்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருக்கும் விராட் கோலியின் பளுவை குறைக்க டி20 கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் கொடுக்கலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.

    இதனால் அவரை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் யுவராஜ்சிங் , டி20 கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை கிரிக்கெட் முறைதான் இருந்தது. இதனால் ஒரே கேப்டன் என்பது சரியானதாக இருந்தது. தற்போது மூன்று வகை கிரிக்கெட் இருக்கிறது. விராட் கோலி வேலைப்பளு அதிகம் என்று உணர்ந்தால், மற்றொருவரிடம் டி20 அணி கேப்டன் பொறுப்பை கொடுக்க முயற்சி செய்யலாம். ரோகித் சர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன்.

    விராட் கோலியின் வேலைப்பளுவை அணி நிர்வாகம் எப்படி எடுத்துக் கொள்ள போகிறது என்று எனக்குத் தெரியாது. அவர்கள் டி20-யில் ஏதாவது செய்ய விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி செல்ல இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது. விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவரது வேலைப்பளுவை எப்படி நிர்வகிப்பார்?. இதுகுறித்து அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.
    ×