search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலி ரிஷப் பந்த்
    X
    கங்குலி ரிஷப் பந்த்

    ரி‌ஷப் பந்துக்கு கங்குலி ஆதரவு: 3 வகையான போட்டியிலும் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும்

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்துக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு மாற்றாக ரி‌ஷப் பண்ட் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் 3 வகையான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

    இதற்கிடையே கடந்த சில போட்டிகளில் ரி‌ஷப் பந்த் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவர் ரன்களை குவிக்க திணறுகிறார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் அவரது செயல்பாடு மோசமாக இருக்கிறது.

    இதனால் ரி‌ஷப் பந்த் விமர்சனத்துக்கு உள்ளானார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ரி‌ஷப் பந்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    3 வகையான போட்டியிலும் அவரே விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    ரி‌ஷப் பந்த் ஆட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் விளையாட விளையாடதான் கற்றுக்கொள்வார். இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு கேப்டனின் ஆதரவு மிகவும் அவசியம்.

    அந்த வகையில் ரி‌ஷப் பந்துக்கு அதிக ஆதரவு தேவைப்படுகிறது. அவர் அணியில் நுழையும்போது மிகவும் சிறப்பான நிலையில் இருந்தார். என்னை பொறுத்த வரையில் இந்திய அணியின் 3 வகையான போட்டிகளுக்கும் ரி‌ஷப் பந்த்தான் பொருத்தமான விக்கெட் கீப்பராக இருப்பார். அவரே சரியான தீர்வாக திகழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×