search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ரோகித் சர்மா டக்அவுட்: டிராவில் முடிந்த பயிற்சி ஆட்டம்

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது.
    இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா - இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த 26-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது.

    முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது, 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. அந்த அணி மார்கிராம் (100), பவுமா (87), பிலாண்டர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஈஸ்வரன் 13 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 39 ரன்னிலும் வெளியேறினர். பன்சால் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் பரத் 71 ரன்களும் சேர்த்தனர். இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 64 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என்று இந்திய அணி தெரிவித்த நிலையில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்து டக்அவுட் ஆனது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×