என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமித் நகால்
    X
    சுமித் நகால்

    ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சுமித் நகால் தரவரிசையில் முன்னேற்றம்

    ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற சுமித் நகால் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
    அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது.  இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர்.  இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது.

    உலக தரவரிசையில் 161-வது இடத்தில் இருந்து நகால் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.  இதனால், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை நகால் பெற்றுள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசையில் 26 இடங்கள் முன்னேறி 135-வது இடத்தை பிடித்துள்ளார்.
    Next Story
    ×