என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - டோனி
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - டோனி

    கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஜனாதிபதி புகழாரம்

    கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று புகழாரம் சூட்டினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமித்தமாக டோனி என்னை சந்தித்தார். அது மகிழ்ச்சியை தந்தது. நான் அவரிடம், “பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், உங்கள் அதீத திறமையால் மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்றேன்.

    மேலும் அவர், ஜார்கண்ட் மாநிலத்தின் பிரபலமானவர்களின் சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.

    1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தந்த ஆக்கி அணியின் கேப்டன் ஜெயபால் சிங் முண்டா, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோரின் சாதனையையும் எடுத்துரைத்தார்.

    Next Story
    ×