search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சகா அஸ்வின்
    X
    சகா அஸ்வின்

    முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய லெவன் அணியில் அஸ்வின், விருத்திமான் சகா: பும்ரா, பந்த் அவுட்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் மற்றும் விருத்திமான் சகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாத அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பும்ரா இல்லாததால் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டு விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே, 3. ரோகித் சர்மா, 4. மயாங்க் அகர்வால், 5. புஜாரா, 6. விஹாரி, 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. சகா, 10. இசாந்த் சர்மா, 11. முகமது சமி.
    Next Story
    ×