என் மலர்
விளையாட்டு
டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா)- நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தூர்:
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.
சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
இந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.
லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் கரீம் ஜனாத்தின் அபார பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.
லக்னோ:
வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி நிலை குலைந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜனாத் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் ஹாங்காங் வீரரிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங்கைச் சேர்ந்த லீ செயுக் யியுவை
எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் லீ செயுக் யியு 21-9, 25-23 என்ற கணக்கில் கிதாம்பியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்ரீகாநத் கிதாம்பி ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினார்.
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
இந்தூர்:

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதையடுத்து, 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி தொடக்கம் முதலே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிலைத்து நின்று ஆடவேண்டிய தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் மட்டும் சற்று நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வங்காளதேச அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்காளதேச அணி சார்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணி 203 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.
இந்தூர்:
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி தொடக்கம் முதலே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிலைத்து நின்று ஆடவேண்டிய தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் மட்டும் இந்திய அணியின் பந்து வீச்சை சற்று சமாளித்து விளையாடினார். அரைசதம் கடந்த அவர் தற்போது 57 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு வங்காள தேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 493 ரன்களில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இந்தூர்:
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். புஜாரா 54 ரன்களும், ரகானே 86 ரன்களும் எடுத்திருந்தனர். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இன்று மதியம் வரை இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜடேஜா சதமும், உமேஷ் யாதவ் அரை சதமும் அடிக்கும் வரை அவர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நிறைய நேரமும் மீதி இருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி, திடீரென டிக்ளேர் செய்தது அனைவரையும் குழப்பமடைய செய்தது.

இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேச அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது. 18 ரன்கள் எடுப்பதற்குள் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வங்காளதேசம் இழந்தது. உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தடுமாற்றத்துடன் வங்காளதேசம் விளையாடி வருகிறது.
உலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றனர்.
துபாய்:
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்க வீரர் சாம் கிரிவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
பீகாரை சேர்ந்த சரத்குமார் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் லால் வினாய் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்தார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் எனது செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் உக்ரைனில் தங்கி இருந்து கடுமையான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் பயிற்சி மேற்கொண்டேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். எனது பயிற்சி அட்டவணை மற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரிமுத்து கருத்து தெரிவிக்கையில், ‘எனது உடல் சரியாக ஒத்துழைக்கவில்லை. எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முடியவில்லை. மாலையில் சீதோஷ்ண நிலை குளிராக இருந்தது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் கத்துக்குட்டி அணியான மேகாலயா மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - மேகாலயா அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மேகாலயாவின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேகாலயா களம் இறங்கியது. ரவி தேஜா 61 ரன்களும், சஞ்சய் யாதவ் 55 ரன்களும் அடிக்க 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்து மும்பையை வீழ்த்தியது.
6-வது போட்டியில் மும்பையின் முதல் தோல்வி இதுவாகும். மேகாலயாவின் 2-வது வெற்றி இதுவாகும். தோல்வியடைந்தாலும் மும்பை முதல் இடத்தில் நீடிக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து வீரர்களை ரிலீஸ் செய்துள்ள நிலையில், மற்ற அணிகளும் வெளியேற்றிய வீரர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது என்ற விவரம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மோகித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, துருவ் ஷோரே, சைத்தான்யா பிஷ்னோய் ஆகிய ஐந்து வீரர்களை வெளியேற்றியுள்ளது. 14.60 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் தீபக் ஹூடா, மார்ட்டின் கப்தில், ரிக்கி புய், யூசுப் பதான் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 17 கோடி ரூபாய் வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அக்ஷ்தீப் நாத், நாதன் கவுல்டர்-நைல், கொலின் டி கிராண்ட்ஹோம், பிரயாஸ் பர்மன், டிம் சவுத்தி, குல்வான்ட் கெஜ்ரோலியா, ஹிம்மன் சிங், கிளாசன், மிலிந்த் குமார், ஸ்டெயின் ஆகிய 12 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆஷ்டோன் டர்னர், ஒசானே தாமஸ், ஷுபம் ரஞ்சன், பிரசாந்த் சோப்ரா, இஷ் சோதி, ஆர்யமான் பிர்லா, ஜெய்தேவ் உனத்கட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியம் லிவிங்ஸ்டன், சுதேசன் மிதுன் ஆகிய 11 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 28.90 கோடி ரூபாயை வைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1. ராபின் உத்தப்பா, 2. கிறிஸ் லின், 3. பியூஷ் சாவ்லா, 4. ஜோ டென்லி, 5. யர்ரா பிரித்விராஜ், 6. நிகில் நாயக், 7. கேசி கரியப்பா, 8. மேத்யூ கெல்லி, 9. ஸ்ரீகாந்த் முண்டே, 10. கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 35.65 கோடி ரூபாயை வைத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1. டேவிட் மில்லர், 2. அண்ட்ரூ டை, 4. சாம் குர்ரான், 5. வருண் சக்ரவர்த்தி ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 42.70 கோடி ரூபாய் வைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 1. கிறிஸ் மோரிஸ், 2. கொலின் முன்ரோ, 3. ஹனுமா விஹாரி, 4. அங்குஷ் பெய்ன்ஸ், 5. கொலின் இங்க்ராம் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 1. யுவராஜ் சிங், 2. எவின் லெவிஸ், 3. ஆடம் மில்னே, 4. ஜேசன் பெரெண்டர்ஃப், 5. பரிந்தர் சரண், 6. பென் கட்டிங், 7. பங்கஜ் ஜெய்ஸ்வால் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 13.05 கோடி ரூபாய் வைத்துள்ளது.

மயங்க் அகர்வால் 243 ரன்கள் விளாசி இந்தியா ஒரேநாளில் 407 குவித்ததால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் அடித்த புஜாரா 54 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.

ரகானே 86 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அவர் 330 ரன்களில் 28 பவுண்டரி, 8 சிக்சருடன் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் நாளில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என வென்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் முடிவு செய்தது. முதல் பயிற்சி ஆட்டம் கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்தது. ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். மேலும் எதிரணியை 122 ரன்னில் சுருட்டியது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 44 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த ஷான் மசூத் 76 ரன்கள் குவித்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆசாத் ஷபிக் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் பாபர் அசாம் 63 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் சேர்த்துள்ளது. ஆசாத் ஷபிக் 101 ரன்களுடனும், காஷிஃப் பாத்தி 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அடுத்தடுத்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறது.